பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/932

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

918 பன்னிரு திருமுறை வரலாறு

அந்நாட்டின் அரசஞயினன். சமண் சமயச் சார்புடைய கிைய அவன், சமணர் சொற் கேட்டுச் சிவனடியார்களது திருத்தொண்டுக்கு இடர்கள் பல செய்தான். அவ்விடர் நிலையிலும் மூர்த்தி நாயனர் ஆலவாய்ப் பெருமானுக்குச் சந்தனக் காப்பணிதலாகிய தமது திருத்தொண்டினை விடாது செய்துவந்தார். மன்னன் அவரது திருப் பணிக்குத் தடையாக அவர்க்கு எங்குஞ் சந்தனக் கட்டை கொடுக்காதபடி தடுத்தனன். எங்குஞ் சத்தனக் கட்டையைத்தேடிப் பெருது சிந்தைநொந்த மூர்த்தியார், இப்பாண்டி நாடு கொடுங்கோல் மன்னனுகிய இவன் இறந்தொழியத் திருநீற்றுச் சார்புடைய செங்கோல் வேந்தரால் ஆளப்பெறுவது எப்பொழுது? என்று ஏங்கிப் பகல் முழுதும் சந்தனக் கட்டைதேடி அலுத்துப் பின்பு திருவாலவாய்த் திருக்கோயிலை யடைந்தார் ; இறைவன் திருமெய்ப் பூச்சுக்குரிய சந்தனக் கட்டைக்கு முட்டு வந்தாலும் அதனைக் கல்லிலிட்டுத் தேய்க்கும் கைக்கு முட்டுப் பாடில்லை என்று சந்தனக் கல்லிலே தமது முழங்கையை வைத்து, தோலும் நரம்பும் எலும்பும் தேய்ந்து குறையும்படி தேய்ப்பாராயினர். அந்நிலையில் ஆலவாயிறைவர் திருவருளால் அன்பனே! நீ என்பால் வைத்த அன்பின் உறுதிப்பாட்டால் இத்தகைய செய்கையைச் செய்யற்க. உனக்கு இடுக்கண் செய்த கொடுங்கோல் மன்னன் பெற்ற நாடு முழுதும் நீயே கைக்கொண்டு அவளுல் இந்நாட்டிற்கு தேர்ந்த கொடுமைகள் எல்லாவற்றையும் நீக்கிக் காத்துப் பின்பு உன் திருப்பணியைச் செய்து நமது சிவலோகத்தை அடைவாயாக’ என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. இவ்வண்ணம் எழுந்த அருள்மொழியைச் செவிமடுத்த மூர்த்தி நாயனர் அஞ்சித் தமது கையைத் தேய்த்தலை நிறுத்தினர். அவரது கையானது தேய்ந்த புண் ஊறு தீர்ந்து நலம்பெற்றது. அந்நாள் இரவில் அமண்சார் பினஞன கருநாடர் மன்னன் இறந்து, சிவனடியார்களுக்கு இடர் விளைத்ததன் காரணமாகக் கொடிய நரகத்தை யடைந்தான். மறுநாள் விடியற் காலை அமைச்சர்கள் கூடி அரசனுக்கு இறுதிக் கடின் செய்தனர். அவனுக்கு மைந்தர் இல்லாமையால் வேருெருவரை அரசனுக நியமிக்க எண்ணினர் யானையைக் கண்கட்டி விட்டால் அந்த யானை எவரை எடுத்து வருகிறதோ அவரே