பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/934

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

920 பன்னிரு திருமுறை வரலாறு

திக்கும் அடியேன் என நம்பியாரூரராற் போற்றப் பெறுவாராயினர்.

முருக காயர்ை

சோழ நாட்டிற் பொய்கை சூழ்ந் அந்தணர் மரபில் தோன்றியவர் முருகதாயஞர். ஞான வரம்பின் தலைநின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறை அன்பால் உருகும் மனத்தார். நாள் தோறும் விடியற்காலையிலெழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ நீர்ப்பூ, நிலப்பூ எனப் படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலேகளாகத் தொடுத்துத் திருப்புகலூர் வர்த்தமானிச்சரத் திருக் கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும் திருவைந் தெழுத்தோதியும் வழிபடும் இயல்பின ராய் வாழ்ந்தார். இவர், திருப்புகலூர்ப் பெருமானை வழிபடத் திருஞானசம்பந்தப்பிள்ளையார் எழுந்தருளிய போது பிள்ளையாரை எதிர்கொண்டழைத்துத் தமது திருமடத்தில் அமர்த்தி உபசரித்துப் போற்றியவர்; அடியார் குறிப்பறிந்து அவர்களுக்கு வேண்டுவன நல்கும் பேரன்புடையவர். முருக நாயனர் நாள் தோறும் விடியற் காலையிலெழுந்து பொய்கையில் மூழ்கி நறுமலர் கொய்து மாலை தொடுத்தணிந்து வர்த்தமானிச்சரப் பெருமானை முப்போதும் அன்பினுல் வழிபட்டுப் போற்றிய திறத் தினையும், அவ்வழிபாட்டில் இறைவனது திருக் கோலத்தைச் சிவனடியார்கள் கண்டு கண்டு உளங்களிப்

புற்ற திறத்தினையும்,

" தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாத்தமும்

புகையும் கொண்டு கொண்டடி பரவிக்குறிப்பறி முருள்செய் கோலம் கண்டு கண்டு கண் குளிரக் களிபரந் தொனிமல்கு கன்னாச் வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானிச்சரத் தாரே " எனவும்,

'மூகவண்டறை பொய்கை முருகன் முப்போதுஞ்செய் முடிமேல்

வாச மாமலருடையார் வர்த்தமாணிச்சரத்தாரே'