பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/937

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 923

கழித்தார். அதனுல் அவருக்கு நாளைப் போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.

திருநாளைப் போவாராகிய நந்தனுர், ஒருநாள் தில்லைச் சிற்றம்பலத்தைக் கண்டு இறைஞ்ச வேண்டும் என்னும் பெருவிருப்பம் தம்மைப் பிடித்துத் தள்ளுதலால் ஆதனூரை விட்டுப் புறப்பட்டுத் தில்லையின் எல்லையை அடைந்தார். அத்திருப்பதியில் வேள்விப் புகையும் அந்தணர் வேத மோதுமிடங்களும் நெருங்கினமை கண்டு தாம் பிறந்த குலத்தினை நினைந்து அதனுள்ளே புகுதற்கு அஞ்சி நின் ருர். அங்ங்னம் நின்ற நந்தனர் தில்லையின் பெருமையினை நினைப்பா ராய்ப் புறமதிலைக் கடந்து ஊரைச் சுற்றிய மதிலின் திருவாயிலினுள்ளே புகுபவர் அந்தணர் மாளிகைகள் வேள்வி மண்டபங்கள் நிறைந்த இவ்விடத் தில் எனக்கு அடைதல் அரிது என்று அஞ்சி அப்பதியின் மதிற் புறத்தே ஆராத பெருங்காதலால் உள்ளுருகிக் கைதொழுது அப்பதியை வலங் கொண்டு சென்ருர், இவ்வாறு இரவு பகல் தில்லைப்பதியைப் புறத்தே வலம் வந்தவர் மைவண்ணத் திருமிடற்ருர் மன்றில் நடங் கும்பிடுவது எவ்வண்ணம் ? என்று எண்ணி ஏக்கத்துடன் துயில் கொண்டார். இன்னல் தரும் இழிபிறவாகிய இது, இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழி படுதற்குத் தடையாயுள்ளதே ?’ என்று வருந்தித் துயில் கொள்வாராகிய நந்தனரது வருத்தத்தை தீக்கியருள் புரியத் திருவுளங் கொண்ட தில்லைக்கூத்தப் பெருமான், ' என்று வந்தாய் என்னும் புன்முறுவற் குறிப்புடன் நாளைப் போவாரது கனவில் தோன்றி, “ இப்பிறவி போய் நீங்க எரியினிடை, நீ மூழ்கி, முப்புரிநூல் மார்பருடன் முன்னணைவாய்" என மொழிந்து அப்பரிசே வேள்வித்தி அமைக்கும்படி தில்லை வாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள் புரிந்து மறைந்தருளினர்.

அந்நிலையில், தில்லை வாழந்தணர்கள் எல்லோரும் விழித்தெழுந்து கூத்தப் பெருமானது கட்டளையினை யுணர்ந்து திருக்கோயில் வாயிலிலே வந்து கூடினர்கள். எம்பெருமான் அருள் செய்த பணிசெய்வோம் என்று ஏத்திப் பெருங்காதலுடன் வந்த திருத்தொண்டராகிய திருநாளைப் போவாரை அடைந்து, ஐயரே, அம்பலவர்