பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/939

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 925

திருக்குறிப்புத் தொண்ட காயனர்

தொண்டை நன்னட்டில் காஞ்சி நகரத்திலே ஏகாலியர் மரபில் தோன்றியவர்; செவ்விய அன்புடையவர் ; நல் லொழுக்க நெறி நின்றவர்; சிவனடித் தொண்டு புரிபவர் ; மனமொழி மெய்யாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பவர் ; சிவனடியார் திருக் குறிப்பறிந்து போற்றும் உள்ளத்திண்மையினுல் திருக் குறிப்புத் தொண்டர் என அழைக்கப்பெறும் சிறப்புப் பெயருடையவர். இவர் சிவனடியார்களது ஆடையினைத் துவைத்துக் கொடுத்தலைத் தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். அடியவரது அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்ட திரு வேகம்பப் பெருமான், குளிர் காலத்திலே ஒரு நாள் சிவனடி யார் திருமேனிகொண்டு. அழுக்கடைந்த கந்தையுடன் திருக் குறிப்புத் தொண்டரை யடைந்தார். தளர்ந்த திருமேனியுடைய சிவனடியாராகிய அவரைக் கண்ட திருக் குறிப்புத் தொண்டர், அன்பினுல் எதிர்கொண்டு வணங்கி இன்மொழி பகர்ந்து அவரது குறிப்பறிந்து தாங்கள் உடுத்துள்ள இக்கந்தையைத் துவைத்தற்குத் தாருங்கள் என்று கேட்டார். வந்த சிவனடியார் யான் உடுத்துள்ள இந்தக் கந்தை அழுக்கேறி எடுத்தற்குத் தகுதியில்லாத நிலையிலிருப்பினும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து கைவிடாது உடுத்துள்ளேன். மாலைப் பொழுதா வதற்குள் தருவீராயின் விரைந்து கொண்டு போய்த் துவைத்துத் தருவீராக’ என்று கூறினர். அது கேட்ட திருக்குறிப்புத் தொண்டர் ‘அடியேன் காலந்தாழ்க்காமல் மாலைப் பொழுதிற்குள் விரைவில் வெளுத்துத் தருகின் றேன், தந்தருள்வீராக’ என்று வேண்டினர். வந்த அடிய வர், கந்தையாகிய இதனை விரைவில் துவைத்து உலர்த்தித் தாராதொழிவிராயின் இந்த உடம்புக்கு இடர் செய்திராவீர் என்று சொல்லித் தாம் உடுத்திருந்த கந்தையை அவர் கையிற் கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட திருக் குறிப்புத் தொண்டர், குளத்திற்குச் சென்று முன் சிறிது அழுக்கைப் போக்கி வெள்ளாவியில் வைத்துப் புழுக்கித் துவைக்கப் புகுமளவில், பெருமழை விடாது பெய்வதா யிற்று. அது கண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடி யார்க்குத் தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி இனி