பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பன்னிரு திருமுறை வரலாறு


எனவும் வரும் திருச்சிற்றம்பலக்கோவைத் தொடர்களாலும், " அன்பர் துதிப்ப அவர்வயின் தான் கொள்ளும் பெருந் துதியை என்வயின் உண்டாக்கிக் கொண்டவன் " எனவும், " தானே வந்திருந்து திருத்தவேண்டுதலின் என்னெ ஞ் சத்துப்புகுந்திருந்து தன்னை யான் நினேயும் வண்ணஞ் செய்து அம்பலத்தின்கண் திருமேனிகாட்டி நின்று என்னுல் தன்னைப் புகழ்வித்துக்கொண்ட ஈசன் ” எனவும் அத்தொடர் களுக்குப் பேராசிரியர் உரைத்த உரையாலும் சிவபெரு மானே போந்து இத்திருமுறையைப் பாடும்படி பணித்த திறம் இனிது புலனுதல் காணலாம்.

திருவாசகத்தையும் திருச்சிற்றம்பலக் கோவையையும் கேட்டு எழுதிக்கொண்டு மறைந்த இ స్త్రీ శ్రీశ్రీశ) யேட்டினைத் தில்லைச் சிற்றம்பல னினுராக, மறுநாள் பொன்னம்பல வாணர்க்குப் பூசை செய்ய வந்த பூசகர் அதனைக்கண்டுவியந்து ஊர்மக்களுக்குத் தெரிவித்துத் திருவாதவூரடிகளே யடைந்து அத்திரு முறைக்குப் பொருள் விரித்தருளும்படி வேண்டினரெனவும், அவ்வேண்டுகோளுக் கிசைந்த வாதவூரடிகள் அன்பரெல்லோரையும் அழைத்துக் கொண்டு தில்லைப் பொன்னம்பலத்தை யடைந்து இத்திரு முறைக்குப் பொருளாவார் தில்லைச் சிற்றம்பலவராகிய இவரே " எனச் சுட்டிக்காட்டி அங்குள்ளார் யாவருங் காணத் தில்லையம்பலத்திற் புக்கு இறைவன் திருவடி நீழலிற் கலந்து ஒன்ருயினர் எனவும் கடவுள்மாமுனிவர் கூறுவர். அடிகள் அருளிய மணிவார்த்தையாகிய திருப்பாடல்களின் பொருள் சிவானுபவத்தாலேயே முற்றுமுனர் தற்குரியதாக லானும் அவ்வனுபவத்திற்கு உள்ளிடாயிருப்பவன் தில்லைச் சிற்றம்பலவன் ஆகலானும் அவ்விறைவனையே திருவாசகத் திருமுறையின் பொருளென்று அடிகள் சுட்டியருளினுள். திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை ஆகிய இத்திரு முறைக்கு இறைவனே பொருள் எனக் கூறிய இவ்வுண் డ LDilf,

த்தே வை

# ميمي

" பெருந்துறை புகுந்து பேரின் வெள்ளம்

மூழ்கிய புனிதன் மொழிந்த வாசகமே வாசகம், அதற்கு வாச்சியம் துாசக லல்குல்வேய்த் தோளிடத் தவனே "

எனச் சிவப்பிரகாச சுவாமிகளும்,