பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/943

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 92?

அந்தணர்கள் அதிசயமடைந்தார்கள். சிறிய பெருந்தகை யாராகிய விசாரசருமஞர் அளவில்லாத கலைகளின் பொருட் கெல்லாம் எல்லையாய் விளங்குவது அம்பலவரது எடுத்த பொற்பாதமே எனத் தம் சிந்தையில் தெளிந்துணர்ந்தார். நடமே புரியும் சேவடியார் ஆகிய இறைவன் உயிர்க ளாகிய நம்மை ஆளாகவுடையார் ' என்னும் உறுதிப் பாட்டினையுடையராய் விசாரசருமர் ஒழுகிவரும் நாளில் ஒரு நாள், வேதம் ஒதுகின்ற இடத்திற்கு மறைச் சிறுவர் களுடன் சென் ருர். அப்பொழுது தெருவில் ஊர்ப் பசுக் களை மேய்த்தற் பொருட்டு ஒட்டிச் செல்லும் இடைச்சிறுவன் தன்னைக் கொம்பால் முட்டவந்த ஈற்றுப் பசுவைக் கோலினுல் நையப்புடைத்தான். அது கண்டு பொருத விசாரசருமர், அவனை வெகுண்டு விலக்கி, இறை வனுக்குத் திருமஞ்சனத்துக்குப் பால் தயிர் நெய் முதலிய ஐந்தினையளிக்கும் பசுவின் பெருமையினை உள்ளவாறு உணர்ந்து தாமே அவ்வானிரைகளை மேய்க்க விரும்பி அவ்விடையனை நோக்கி நீ பசுநிரை மேய்த்தலை ஒழிவா யாக இன்று முதலாக யானே இவற்றை மேய்ப்பேன் என்ருர். அது கேட்ட இடைச்சிறுவன் அஞ்சி அகன்ருன்.

விசாரசருமர் பசுக்களை அவற்றுக்குரிய அந்தணர் களின் இசைவு பெற்று நாள் தோறும் மண்ணியாற்றின் கரையிலுள்ள காடுகளிலும் வயலோரங்களிலும் புல் நிறைந்த இடங்களில் வயிருர மேயவிட்டுத் தண்ணிருட்டி உச்சி வேளையில் நிழலில் தங்கச் செய்து நன்ருகக் காப் பாற்றி, சமித்துக்கள் ஒடித்துக்கொண்டு மாலையில் அப் பசுக்களை அவரவர் வீட்டுக்கு ஒட்டிப் போய் விட்டுத் தமது வீட்டுக்குச் செல்லுதலை வழக்கமாகக் கொண்டார். இவ் வாறு மறைச்சிறுவரால் மேய்க்கப்பெற்ற பசுக்கள் மடி சுரந்து பாலை மிகப் பொழிந்தன. அப் பசுக்கள் தம் கன்றைப் பிரிந்தாலும் தம்மை அன்புடன் மேய்த்துக் காக்கும் மறைக்கன்ருகிய விசாரசருமரைப் பிரிய மனமில்லா தனவாய் அவரருகே சென்று அன்பினுற் கனத்துத் தாமே மடிசுரந்து பால் பொழியும் தாயன்புடையனவாயின. தம்மால் மேய்க்கப்பெறும் பசுக்கள் கறவாமே பால் பொழியக்கண்ட விசாரசருமர், அவற்றின்பால் நிலத்தில் வீழ்ந்து வீணுகாமல் இறைவனுக்குத் திருமஞ்சனமாதல் வேண்டும் என எண்ணிஞர். அந்நிலையில் அவருள்ளத்