பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/948

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

932

பன்னிரு திருமுறை வரலாறு


  • கடிசேர்ந்த போதுமலராயின கைக்கொண்டு நல்ல

படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதைபண்டு முடிசேர்ந்த காலேயற வெட்டிட முக்கன் மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் அறிந்தார் சொலக் கேட்டுமன்றே

(3-54–7) எனவரும் திருப்பாசுரத்தால் இனிது விளங்கும்.

சண்டீசப்பிள்ளையார் மண்ணியாற்றின் கரையில் வெண் மணலாற் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட அருள் நிலையமே திருவாப்பாடி யென்னும் திருத்தலமாகும்.

திருநாவுக்கரசு நாயஞர்

  • திருநின்ற செம்மையே செம்மையாக்கொண்ட

திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன் எனத் திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற திருநாவுக்கரசரது வாலாறு முன்னர் (பன்னிரு திருமுறை வரலாறு முதற்பகுதி 186-198ஆம் பக்கங்களில்) விரிவாக ஆராய்ந்து விளக்கப்பெற்றது.

குலச்சிறை நாயனர்

பெரு நம்பிகுலச் சிறைதன் அடியார்க்கும் அடியேன்

எனப் போற்றப்பெற்ற இப்பெருந்தகையார் பாண்டி நாட்டில் மணமேற்குடியிற் பிறந்தவர். இவர் பிறந்த மரபு இதுவெனத் தெரியவில்லை. குலச்சிறையாராகிய இவர், அரசனுற் பெருநம்பி எனச் சிறப்பிக்கப்பெற்றவர் : திருத் தொண்டில் வழுவாத திண்மையுடையவர் ; சிவனடியாராக யார்வந்தாலும் அவர்களே அன்புடன் வணங்கி இன்னுரை பகரும் இயல்பினர் ; உலகரால் மதிக்கப்பெறும் நால்வகைக் குலத்திற் பிறந்தவராயினும் அன்றி அக்குலத்தில் நீங்கிய வராயினும் சிவபெருமானுக்கு அடியார் என்ருல் அவர்களைப் பணிந்து ஏத்தும் தொழிலுடையவர்; சிவனடியார்கள் நலமுடையராயினும் நலமிலராயினும் அவர்களைப் பணிதலே தவமெனக்கொண்டவர்; அடியார்கள் தனித்து வரினும் கூட்டமாய் வரினும் அன்பினுல் எதிர்கொண்டு திருவமுதுரட்டும் இயல்புடையவர்: திருநீறும் சாதனமும் உடையராய்த் திருவைந்தெழுத்தினையோதும் நாவணக்கத் தினையுடைய அடியார்களின் திருவடிகளை நாளும்பாவிப்