பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/949

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 933

போற்றுபவர். இத்தகைய நற்பண்புகளையுடைய குலச் சிறையார் பாண்டியனுடைய அமைச்சர்களுள் முதல்வராய் விளங்கினர்; பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க் கரசியாரது திருத்தொண்டுக்குத் துணை புரியும் மெய்த் தொண்டராயினுர் , சமணர்களது பொய்ம்மைச் சமயம் தென்னுட்டைவிட்டு அகலவும் தென்னுடு திருநீற்றின் ஒளிபெறவும் திருஞானசம்பந்தப் பிள்ளையாருடைய திரு வடிகளைச் சென்னி சேர்த்தி வழிபட்ட சிறப்பினையுடையார்; வாதில் தோல்வியுற்ற அமணர்களை அவர்கள் சபதஞ் செய்தவண்ணம் வலிய கழுவிலே ஏற்றுவித்தார். இவரது அடியார்பத்தியினையும் அருங்குணங்கள் பலவற்றையும் ஆளுடைய பிள்ளையார் தாம்பாடிய மங்கையர்க்கரசி என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் 2, 4, 6, 8, 10-ஆம் திருப்பாடல்களிற் சிறப்பித்துப் போற்றியுள்ளமை காணலாம். இவர் அரசரால் அளிக்கப்பெற்ற பெருநம்பி ’ என்ற சிறப்பினைப் பெற்றவர் எனத் தெரிகிறது.

பெருமிழலைக்குறும்ப நாயனர்

சோழநாட்டின் உள்நாடாகிய மிழலைநாட்டிற் பெரு மிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலைக் குறும்பஞர் ஆவர். இவர் சிவனடியார்க்கான திருப்பணி களை விருப்புடன் செய்பவர் ; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமரையில் இருத்தி வழிபாடு செய்பவர்; மெய்யடியார் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரரைப்பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டவர் ; நம்பியாரூரர் திருவடிகளைக் கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்குங் கடப்பாட்டினுல் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைதற்குரிய நெறியாகும் என்று அன்பினல் மேற்கொண்டவர்; நம்பியாரூரர் திருப் பெயரினை நாளும் நவின்ற நலத்தால் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் கைவரப்பெற்றவர் ; இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்று

பவர்.

இத்தகைய நியமங்களையுடையராய்ப் பெருமிழலைக் குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனர்