பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/951

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 93;

திருநாவுக்கரசர் திருப்பெயரால் திருமடங்கள் தண்ணிர்ப் பந்தர்கள் முதலாகவுள்ள அழிவில்லாத நல்லறங்கள் பல செய்து வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வரும் நாளில் ஒரு நாள் திருநாவுக்கரசர் திருப்பழனம் என்னும் திருத்தலத்தை வணங்கிக்கொண்டு பிற தலங்களையும் வணங்கும்பொருட்டுத் திங்களுரின் அருகே வந்தருளினர். வரும்வழியில் தம் பெயரால் தண்ணிர்ப்பந்தல் இருப்பதைக் கண்டு அதனை அமைத்தார் யார் என அங்குள்ளவரைக் கேட்டறிந்து அப்பூதியடிகளது திருமனையின் வாயிலை அடைந்தார். உள்ளிருந்த அப்பூதியார், சிவனடியா ரொருவர் வாயிலில் வந்துள்ளார் என்றறிந்து விரைந்து சென்று அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். திருநாவுக்கரசர் அப்பூதியடிகளை நோக்கி, வழிக்கரையில் நீர்வைத்த தண்ணீர்ப்பந்தரும் கண்டு அத்தகைய அறம்பிறவும் கேட்டு நூம்மைக் காண வந்தோம். சிவனடியார் பொருட்டு நீர்வைத்த தண்ணிர்ப்பந்தரில் நும்முடைய பெயர் எழுதாது வேருெருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் யாது?’ என வினவிஞர். அதுகேட்ட அப்பூதியார், நன்மொழியினைப் பகர்ந்திவீர். நாணில்லாத கொடியோராகிய அமணர்களுடன் கூடிய மன்னவன் செய்த இடர்களையெல்லாம் திருத்தொண்டின் உறைப்பாலே வென்றவர்தம் திருப்பேரோ வேருெருபேர் ? என்று வெகுள்வாராகி, சிவனடித்தொண்டினலே இம்மையினும் பிழைக்கலாம் என்னும் உண்மையினை என்போல்வாரும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசர் திருப்பெயரையான் எழுத இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி கூறினீர். கல்லே மிதவையாகக் கொண்டு கடலைக்கடந்த அப்பெருந்தகையாரது பெருமையினை இவ்வுலகில் அறியாதார் யார்? மங்கலமாம் சிவவேடத் துடன் நின்று இவ்வாறு பேசும் நீர் எங்குறைவீர் ? நீர் தாம் யார்?' என்ருர், அப்பூதியாரது அன்பின் பெருமையையறிந்த திருநாவுக்கரசர், புறச்சமயச் சூழலினின்றேற அருளுபெருஞ்சூலையினுல் ஆட்கொள்ள அடைந்துய்ந்த தெருளுமுணர்வில்லாத சிறுமையேன் யான் என்ருர். அதுகேட்ட அப்பூதியார், இருகைகளும் தலைமேற்குவிய, கண்ணிர் சொரிய, உரை தடுமாற நிலமிசை வீழ்ந்து திருநாவுக்கரசின் திருவடித்தாமரை களைப் பூண்டார். அப்பரடிகள் அவரை எதிர்வனங்கி