பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/953

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 937

குறித்து மகிழாமல் நாயனர் திருவமுது செய்தருளத் தாழ்த்தமை குறித்து மனம் வருந்த, அவர்களது வருத்த மறிந்து நாவுக்கரசர் அவர்களோடும் மனைக்கண் சென்று அப்பூதியாரோடும் அவர் தம் மக்களுடனும் ஒருங்கமர்ந்து திருவமுது செய்தருளினர். பின்பு சில நாள் அங்கிருந்து அப்பூதியடிகளுடன் திருப்பழனப் பெருமான வழிபட்டுப் பாடிய திருப்பதிகத்தில் அஞ்சிப் போய்க் கலிமெலிய அழ லோம்பும் அப்பூதி குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் என இறைவனையும் அப்பெருமான் சேவடிகளைச் சென்னி யிற் கொண்ட அப்பூதியடிகளையும் சிறப்பித்துப் போற்றி யுள்ளார். திருநாவுக்கரசர் திருப்பெயரையே ஏத்தி அவர் திருவடிகளே எல்லாப் பொருளுமாம் எனக்கொண்டு போற்றுதலே செந்நெறியாகக்கொண்டு அப்பூதியடிகள் தில்லைமன்றுள் ஆடும் திருவடிகளை அடைந்தார்.

  • உற்ருனலன் தவம், தீயினின்ருனலன், ஊண்புனலா

அற்ருனலன் நுகர்வும், திருநாவுக்கர செனுமோர் சொற்ருன் எழுதியுங் கூறியுமே என்று ந் துன்பில் பதம் பெற்ருன் ஒரு நம்பியப்பூதி யென்னும் பெருந்தகையே ”

எனச் சிவப்பிரகாசர் நால்வர் நான்மணி மாலையில் அப்பூதி யடிகளைக் குறித்துப் போற்றியுள்ளமை இங்கு நினைத்தற் குரியதாகும்.

திருநீலகக்க காயர்ை

காவிரி நாடாகிய சோழநாட்டில் சாத்தமங்கை என்னும்பதியிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் திருநீலநக்கர். ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன் என வரும் திருத்தொண்டத் தொகை இவரது ஊர் சாத்தமங்கை எனத் தெளிவாகக் குறித்தல் காணலாம். நீலநக்கராகிய இப் பெருந்தகையார், வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும் சிவனடியார்களையும் அன்பினுல் அருச்சித்து வணங்குதலே எனத் தெளிந்து நாள் தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்து அய வந்தியீசரை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாக எவ்வகைப்பட்ட திருப்பணிகளையும்

செய்து வந்தார்.