பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/954

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

938

பன்னிரு திருமுறை வரலாறு


திருநீலநக்கர் அவ்வாறு ஒழுகும் நிலையில் திருவா திரை விண்மீன் கூடிய ஒரு நாளிலே சிவபூசையை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி எனனும் திருக்கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமான త్తి అ ಹ விரும்பினர். பூசைக்கு வேண்டும் பொருள்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன் வரத் திருக் கோயிலையடைந்து அயவந்தி யீசரை முறைப்படி பூசித்து இறைவர் திருமுன் இருந்து திருவெழுத்தினச் செபித் தார். அப்பொழுது சிலந்தியொன்று அயவந்தியீசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீல நக்கர் மனைவி யார், விரைந்து சென்று அதனைப் போக்க வாயினுல் ஊதித் துமிந்தார். நாயனர் அச்செயலைக் கண்டு தம் கண்ணப் புதைத்து அறிவிலாதாய் ! நீ இவ்வாறு செய்தது ஏன் என்று வினவ, சிலம்பி விழுந்தமையால் ஊதித் துமிந் தேன் என்ருர் மனைவியார். நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேருெரு பரிசால் விலக்காமல் முற் பட்டு ஊதித் துமிந்தாய். இத்தகைய அருவருக்குஞ் செய்கை செய்த உன்னையான் இனித் துறந்தேன். நீங்கி விடு' என்ருர் கணவர். மனைவியாரும் அது கேட்டு அஞ்சி ஒரு பக்கம் விலகினர். நீலநக்கர் பூசையை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி விட்டார். மனைவியார் அஞ்சி ஆலயத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு நீல நக்கர் துயிலும்போது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி உன் மனைவி ஊதித் துமிந்த இடம் தவிர எல்லா இடங்களிலும் சிலந்தி யின் கொப்புளம் என்று சொல்லியருளினர். நீலநக்கர் வணங்கி விழித்தெழுந்து ஆடிப்பாடி நின்று இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினர். விடிந்தபின் శ్రీడః திற்குச் சென்று இறைவனை யிறைஞ்சி மனைவியாரையும் உடனழைத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினர்.

நீல நக்கர் சிவபூசையும் அடியார் பூசையும் செய்து கொண்டு சாத்தமங்கையில் இருக்கும் நாளில், அங்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையாரை அடியார் திருக்கூட்டத்துடன் எதிர்கொண்டு வரவேற்றுத் தம்மனைக் கண் திருவமுது செய்வித்து உபசரித்தார். ஆளுடைய பிள்ளையார் விரும்பிய வண்ணம் திருநீலகண்டப் பெரும் பாணரும் அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும்