பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/955

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 93.9

இரவில் துயில் கொள்ள த் தம் மனையில் இடம்தர எண்ணித் தாம் வேத விதிப்படி தீயோம்பும் வேதிகையின் பக்கத்தி லேயே அவ்விருவர்க்கும் இடந்தந்து தவிஞர். அந்நிலையில் வேதிகையிலுள்ள நித்தியாக்கினி முன்னையிலும் மேலாக வலஞ்சுழித்து ஒளி வீசியது. ஆளுடைய பிள்ளையார் அய வந்தி யீசரைப் பாடிப் பரவிய திருப்பதிகத்தில் அடிகள் நக்கன் எனவும், நிறையினர் நீலநக்கன் எனவும் சிறப் பித்துப் பாராட்டியுள்ளார். ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு நண்பராகிய திருநீலநக்க நாயனர் திருஞானசம்பந்தப் பிள்ளையாரது திருமணத்தினைக் காணத் தம் மனைவியா ருடன் சென்று அத்திருமணத்தில் வேத விதிப்படியமைந்த சடங்குகளை முன்னின்று நிகழ்த்தித் திருநல்லூர்ப் பெரு மணத்தில் ஈறில் பெருஞ் சோதியினுள் உடன் புகுந்தார் என்பது திருஞானசம்பந்தர் புராணத்திற் கூறப்பெற்றது.

நமிநந்தியடிகள் காயஞர்

சோழநாட்டில் ஏமப் பேறுாரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் நமிநந்தியடிகள். நம்பி நந்தி என்னும் பெயரே நமிநந்தி எனத் திரிந்து வழங்கியதெனத் தெரி கிறது. நமிநந்தியடிகள் இரவும் பகலும் பிரியாது சிவபெரு மானைப் பூசித்து மகிழும் சீலமுடையவர். அவர் பல நாளும் திருவாரூர்க்குச் சென்று புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றி வருவார். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலின் ஒருபக்கத்தே அமைந்த அரனெறி என்னும் திருக் கோயிலை வழிபடச் சென்ருர், அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் அவருள்ளத்தெழுந்தது. அப்பொழுது மாலைக்காலம் ஆனமையால் தம்மூர்க்குச் சென்று எண்ணெய் கொணர எண்ணுது திருவாரூரிலேயே ஒரு வீட்டிற் சென்று விளக்கிற்கு எண்ணெய் வேண்டினர். அவர் சென்று கேட்ட வீடு சமணர்கள் வீடு, அங்குள்ள சமணர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, கையிலே ஒளி விட்டு விளங்கும் தீயினை யேந்திய உங்கள் இறைவற்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக் கெரிப்பீராகில் நீரை முகந்து எரிப்பீராக என்றனர். அது கேட்டுப் பொருத நமிநந்தியடிகள் அரனெறிப் பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கினர். அப்பொழுது