பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/961

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 945

அது கேட்டு அவர்கள் கலிக்காமளுரைக் காட்டினர். கலிக் காமர் குடர் சொரிந்து உயிர் பொன்றிக் கிடத்தலைக்கண்ட சுந்தரர் நிகழ்ந்தது நன்று. யானும் இவர்போல் இறந் தொழிவேன் ’ என்று குற்றுடைவாளைப் பற்றினர். உடனே இறைவரருளால் கலிக்காமர் உயிர் பெற்றெழுந்து சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக்கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினர். கலிக்காமரும் வாளை விட்டொழித்து நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். இருவரும் எழுந்து ஒருவரொருவரை அன்பினுல் தழுவிப் பிரியா நண்பராகித் திருப்புன்கூர்ப் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றினர்கள். நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப்பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர் கோன் கலிக்காமர் ஆரூரர் இசைவு பெற்றுத் தம்முடைய ஊர்க்குத் திரும்பித் தமக்கேற்ற திருத்தொண்டுகளைப் புரிந்திருந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்ருர்,

திருமூல காயனர்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் என நம்பியாரூரராற் போற்றப்பெற்ற திருமூல நாயஞரது வரலாறு (இந்நூல் 402-416 ஆம் பக்கங்களில்) முன்னர் விரிவாக ஆராய்ந்து விளக்கப்பெற்றது.

தண்டியடிகள் காயனுள்

தண்டியடிகள் என்பவர் திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார். இறைவன் திருவடிகளை மனத்துட்கொண்டு தோக்கும் அகநோக்கேயன்றிப் புறம் நோக்கும் உணர்வினை விட்டொழித்தார்போன்று பிறந்த பொழுதே கண்காணுத பிறவிக் குருடர். இவர் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியனை முன் இறைஞ்சி வலம் வந்து காதலாகி நமச்சிவாய நற்பதமே எடுத்தோதித் திருவா ரூர்ப் பெருமானடிகள் திருவடிக்கே அன்புடையராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார். ஆரூர்த் திருக் கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளத்தின் பக்க மெங்கும் சமணர்களுடைய பாழிகள் பெருகிக் குளத்தின் இடம் வரவரக் குறைவடைந்தது. அதனையறிந்த தண்டி

60