பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/963

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 947

அவர் நிகழ்ந்தன சொல்லக்கேட்டு அமணர்க்கும் தண்டி யடிகளுக்கு மிடையே நிகழ்ந்த அவ்வழக்கைத் தீர்க்க எண்ணி, அமணர்களை அழைத்து அவர்கள் கருத்தையும் அறிந்துகொண்டான். பின்னர் அமணர் தன்னுடன் வரத் தண்டியடிகளாருடன் குளக்கரையை அடைந்து தண்டி யடிகளை நோக்கி, பெருகுந்தவத்தீர் நீர் சிவனருளாற் கண்பெறுதலைக் காட்டுவீராக என்ருன். அது கேட்ட தண்டியடிகளார், யான் சிவனுக்குப் பொருந்திய அடி யேன் என்ருல் இன்று என் கண்கள் ஒளி விளங்கப்பெற்று அமணர்கள் தம் கண்களை யிழப்பார். அதனுல் ஆராய்ந்த மெய்ப்பொருளும் சிவபதமே ஆகும்' என்று சொல்லித் திருவைந்தெழுத்தை எடுத்தோதிக் குளத்தில் மூழ்கிக் கண்ணுெளி பெற்று எழுந்தார். அங்கிருந்த அமணர்கள் கண்ணுெளியிழந்து வழி தெரியாமல் தடுமாற்றமுற்ருர்கள். பழுது செய்த அமண் கெட்டது என்றுணர்ந்த மன்னன், தன் ஏவலாளரைப் பார்த்து, தண்டியடிகளோடு ஒட்டிக் கெட்ட சமணர்களைத் திருவாரூரினின்றும் அகன்று போம்படி துரத்துவீராக’ எனப் பணித்துத் திருக்குளத் தின் கரைகளைச் செம்மைபெறக் கட்டித் தண்டியடிகளே வணங்கிச் சென்ருன், அகக்கண்ணேயன்றிப் புறக்கண் ணும் பெற்று நாட்ட மிகு தண்டி என நம்பியாரூராற் போற்றப்பெறும் சிறப்புவாய்ந்த தண்டியடிகளார் இறை வனைப் போற்றித் திருவைந்தெழுத்தோதித் திருப்பணிகள் பல புரிந்து சிவபதம் அடைந்தார்.

மூர்க்க காயஞர்

கற்ற சூதன்' எனக் குறிக்கப்பெற்ற மூர்க்க நாயனுர், தொண்டை நாட்டில் பாலாற்றின் வடகரையிலுள்ள திருவேற்காடு என்னும் ஊரில் வேளாளர் மரபிற் பிறந்தவர். ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்றறிந்து சிவனடியார்களுக்கு அறுசுவைப் போனகம் அருத்திப் பின் உண்ணுதலைத் தமது நியமமாகக் கொண்டிருந்தார். நாடோறும் அடியார்களை அமுது செய் விப்பதில் தம்முடைய நிலம் பொருள் யாவும் செலவழிந் தமையால் தாம் முன் கற்றுள்ள சூதாட்டத்தில் ஈடுபட்டு அப்பொருளைக்கொண்டு சிவனடியார்களுக்கு அமுது செய் விக்க எண்ணிஞர். தம்மூரில் தம்முடன் குதுக்கு வரு