பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/964

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

948

பன்னிரு திருமுறை வரலாறு


வோர் இல்லாமையால் சிவத்தலங்கள் தோறும் சென்று இறைவனைப் பணிந்து சில நாளிற் குடந்தையை யடைந்து அங்குள்ள அம்பலத்தே தங்கிச் சூதாடிப் பொருள் தேடி நாள் தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுதளித்து வந்தார். சூதாடுதலில் வல்ல இவர், முதலாட்டத்தில் தாம் தோற்றுத் தம்மிடமுள்ள பொருளைப் பிறர்கொள்ளச் செய்து, பின்னிகழும் ஆட்டங்களிலெல்லாம் தாமே வென்று தம் வெற்றியை உடன்படாது மறுத்தாரைக் குற்றுடை வாளாற் குத்துமியல்பினராதல்பற்றி மூர்க்கர் என அழைக்கப்பெற்ருர், மூர்க்கராகிய இவர், சூதினில் வென்ற பொருள்களைத் தாம் தொடாது சிவனடியார்க்கு அமுதாக்குவார் கொள்ளச்செய்து அடியார் திருவமுதுண்ட பின் தாம் கடைப்பந்தியிலிருந்து உண்ணும் பழக்கமுடை யார். இவ்வாறு பல்லாண்டுகள் சிவனடித் தொண்டு புரிந்த மூர்க்க நாயனுர் ஏதங்கள் போயகல இவ்வுலகை விட்டதற்பின் பூதங்கள் இசைபாட ஆடுவார் பதியாகிய சிவலோகத்தை அடைந்தார்.

சோமாசிமாற நாயஞர்

அம்பரான் சோமாசி மாறனுக்கும், அடியேன் எனப் போற்றப்பெற்ற இவர், சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரிலே அந்தணர் குலத்திலே தோன்றியவர், சிவபத்தி யுடையராய்ச் சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் இயல்புடையவர் ; உமையொரு பாகனுகிய சிவபெரு மானையே முதல்வனெனக்கொண்டு போற்றும் வேள்விகள் பலவற்றை உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தவர்; ஈசனுக்கன்பர் என்போர் எக்குலத்தவராயினும் அவர்கள் நம்மை ஆளாகவுடையவர்கள் என்று உறுதியாகத் தெளிந்தவர்; சிவன் அஞ்செழுத்தும் சித்தத் தெளிய வோதும் நித்த நியமம் உடையவர். இவர், சீரும் திருவும் பொலியும் திருவாரூரை அடைந்து, தம்பிரான் தோழராகிய வன்ருெண்டர்க்கு அன்பினுல் நெருங்கிய நண்பராளுர் : அங்குத் தங்கி அவர் தம் திருவடிகளைப் பணிந்து போற்றிய சிறப்பினால் என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்ருர்.