பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/965

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 949

சாக்கிய காயஞர்

திருச் சங்க மங்கையில் வேளாளர் குடியிற் பிறந்த இவர், எவ்வுயிர்க்கும் அருளுடையராய்ப் பிறவா நிலைபெற விரும்பிக் காஞ்சி நகரத்தையடைந்து புத்த சமயத்தை மேற்கொண்டிருந்தமை பற்றிச் சாக்கியர் என அழைக்கப் பெற்ருர், இறைவன் திருவருள் கூடுதலாற் புத்தம் முதலிய புறச் சமயச் சார்புகள் பொருள் அல்ல என்றும் ஈறில் சிவநன்னெறியே பொருளாவதென்றும் நாட்டும் நல்லுணர்வு கைவரப் பெற்ருர். செய்யப்படும் வினையும், அவ்வினை யைச் செய்கின்ற உயிரும், அவ்வினையின் பயனும், அப்பயனைச் செய்த உயிருக்கே சேர்ப்பிக்கும் இறைவனும் எனச் சைவ சமயத்தில் கூறப்பட்ட பொருள் நான்காகும். இப்பொருட் பாகுபாடு சிவ நெறியல்லாத பிறசமயத்தில் இல்லை. உயிர்களை உய்விக்கும் மெய்ப் பொருள் சிவமே. எந்த நிலையில் நின் ருலும் எக் கோலங் கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்றுதலே உறுதிப் பொருளாகும் " என்று ஆராய்ந்து துணிந்து, தாம் கொண்ட புத்த 翌"#i)競評 வேடத்துடனேயே சிவபெருமானை மறவாது போற்றுவாராயினர்.

அருவமாகியும் உருவமாகியும் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் காரணமாய் இறைவனுக்குத் திருமேனி யாகிய சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து நாள்தோறும் அதனைக் கண்டு வழிபட்ட பின்னரே உண்ணுதல்வேண்டும் என விரும்பினர். தாம் இருக்கும் இடத்திற்கு அண்மையில் வெட்ட வெளியிலே அமைந்துள்ள சிவலிங்கத்தினைச் சென்று கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டவராய் அம்மகிழ்ச்சி யின் விளைவாக ஒன்றுந் தோன்ருது அருகிற் கிடந்த செங்கற் சல்லியை எடுத்து அதன் மேல் எறிந்தார். இளம் புதல்வர் இகழ்வனவே செய்தாலும் அச் செயல் தந்தையர்க்கு உவப்பாற்ை போன்று, சாக்கியர் செய்த இதுவும் சிவபெருமானுக்கு உவப்பாயிற்று. இறைவன் அவர் அன்பினுலெறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக் கொண்டார். சாக்கியர் அன்று போய் மறுநாள் அங்கு வத்த பொழுது முதல்நாள் தாம் சிவலிங்கத் திருமேனியின்மேற் செங்கல் எறிந்த குறிப்பினை எண்ணி, ‘நேற்று இந்த எண்ணம் நிகழ்ந்தது இறைவன் திருவருளே என்று