பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/968

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

952

பன்னிரு திருமுறை வரலாறு


பணியினைச் செய்வேன். அதற்கு என்ன தீங்கு ' என்ருர். அறம்புரி செங்கோலானகிய வேந்தன், அவருக்கு நிறைந்த நிதிக் குவைகளையும் நீடு விருத்திகளையும் அளித்து வணங்கி, நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை யானறியாதபடி கொண்டு நடத்தினர். இனி எம்முடைய மனக்கருத்துக்கு இசைந்து உமது மெய்ம்மைபுரி செயல் விளங்க தும் விருப்பப்படியே செம்மைநெறித் திருத் தொண்டு செய்வீராக’ என விடை கொடுத்தனுப்பினன்.

மன்னவன்பால் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச் செங்காட்டங் குடியினை யடைந்து கணபதிச்சரத்து இறைவரை யிறைஞ்சிச் சிவ நெறித் தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். திருவெண் காட்டு நங்கையாருடன் மனையறத்தினை நிகழ்த்தி நாள் தோறும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துப் பின்பு தாம் உண்ணுதலை வழக்கமாகக் கொண்டார். பரஞ் சோதியார் சிவனடியார்களை விரும்பி வழிபடுங்கால் அவர் முன் மிகச் சிறியராய்ப் பணிந்து ஒழுகினமையால் சிறுத் தொண்டர் என அழைக்கப் பெற்ருர். கணபதிச்சரப் பெருமான் திருவருளால் சிறுத்தொண்டர்க்குத் திருவெண் காட்டு நங்கையார்பால் சீராளதேவர் என்னும் திரு மைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயதடைந்த பொழுது பள்ளியிற் கல்வி பயில வைத்தார். அந்தாளில் திருஞானசம்பந்தப்பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச் செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினர். சிறுத்தொண்டர் ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைத்துப் போற்றினர். ஆளுடைய பிள்ளையாரும் போன்பிற் சிறந்த சிறுத் தொண்டருடன் நண்பினுல் அளவளாவிக் கணபதிச்சரப் பெருமானைத் தாம்பாடிய பைங்கோட்டு மலர்ப் புன்னே என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் சிறுத் தொண்டரைச் சிறப்பித்துப் பாராட்டினர்.

சிறுத்தொண்டரது மெய்த்தன்மையன்பு நுகர்த்தருளு தற்கு விரும்பிய கயிலைப்பெருமான், பைரவ சமய அடியா ராகத் திருவேடந்தாங்கித் திருச்செங்காட்டங்குடியை யடைந்தார். சிறுத்தொண்டரது மனைவாயிலை நண்ணி, தொண்டானோர்க்கு எந்நாளும் சோறளிக்கும் சிறுத் தொண்டர் இம்மனையினுள் உள்ளாரோ?' என வினவி