பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/969

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 953

நின்ருர். அம்மொழியினைக் கேட்ட சந்தனத் தாதியார் முன்வந்து வணங்கி, அவர் அடியாரைத் தேடிப் புறத்தே சென்றுள்ளார். எம்மை ஆளாகவுடையவரே அகத்துள் எழுந்தருள் வீராக’ என வேண்டினர் வந்த பைரவர் அவரை நோக்கி, மாதர்கள் இருந்த இடத்தில் யாம் தனியே புகமாட்டோம்' என்ருர். அதுகேட்ட திருவெண் காட்டு நங்கையார் இவ்வடியவர் போய்விடுவாரோ " என்று அஞ்சி விரைந்து மனைவாயிலில் வந்து எம்பெரு மானே : அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பாராய் அடியார் யாரையும் காணுமல் புறத்தே தேடிச் சென்றுள்ளார் ; தேவரீர் இங்கு எழுந்தருளியதனைக் கண்டால் தாம்பெற்ற பெரும்பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்க மாட்டார் ; இப்பொழுதே வந்தணைவார் தேவரீர் மனை க்கண் எழுந்தருளியிருப்பீராக’ என விண்ணப்பஞ் செய்தார். அதுகேட்ட பைரவர், ஒப்பில் மனையறம் புரப்பீர், யாம் உத்தராபதியுள்ளோம். சிறுத் தொண்டரைக் காண வந்தோம். எவ்வகையாலும் அவரின் றி இங்குத் தங்கமாட்டோம். கணபதிச்சரத்தில் ஆத்திமரத்தின் கீழ் இருக்கின்ருேம். அவர் வந்தால் நாம் இருந்த செய்தியைச் சொல்வீராக என்று கூறித் திரு வாத்தியையடைந்து அதன் கீழ் அமர்ந்தருளினர்.

அடியார்களைத் தேடிப் புறத்தே சென்று மீண்ட சிறுத் தொண்டர் அடியார் ஒருவரையும் காணுமையை மனைவி யார்க்குச் சொல்லி வருந்தினர். அந்நிலையில் மனைவியார், உத்தராபதியாராகிய பைரவ சமய அடியார் ஒருவர் இங்கு வந்து, நாங்கள் இங்கு எழுந்தருளியிருக்கும்படி வேண்ட அதற்கிசையாது கணபதிச்சரத்திலுள்ள திருவாத்தியின் கீழ்ச்சென்று தங்கியுள்ளார்’ என்ருர். சிறுத்தொண்டர் விருப்பினுடன் விரைந்துசென்று ஆத்தியின் கீழமர்ந்த அடியார் திருவடிகளைப் பணிந்து நின்ருர், நின்ற தொண்டரை நோக்கிய பைரவர் நீரோ பெரிய சிறுத் தொண்டர் ? என வினவிஞர். சிறுத்தொண்டர் அவரை வணங்கி, பூதிசாதனமுடைய அடியார்களைப் பணிந்து போற்றுதற்குரிய தகுதி நிரம்பப் பெருதேளுயினும் சிவனடியார்கள் கருணையினுல் என்னே அவ்வாறு அழைப் பார்கள். இன்று சிவனடியார்களை அமுது செய்விக்க விரும்பி எங்கும் தேடியும் காணப்பெற்றிலேன். தவத்தால்