பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 83.

பிந்தியவர் மாணிக்கவாசகர் என்பதாகும். பல்லவபுரத்துப் பொதுநிலைக் & மறைமலையடிகளாவர்கள் தமது விரிந்த ஆராய்ச்சியின் பயணுக எழுதி வெளியிட்ட ' மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் ' என்ற ஆராய்ச்சிப் பெருநூலில் தேவார ஆசிரியர் மூவர்க்கும் காலத்தால் முற்பட்டவர் திருவாதஆசடிகள் என்னும் தமது கொள்கை யிலோப் பலவகைச் சான்றுகளைக் காட்டி நிலைநாட்டியுள்ளார் கள். தஞ்சைச் சீநிவாச பிள்ளையவர்கள் தாமெழுதிய தமிழ் வரலாறென்னும் நூலில் மணிவாசகர் தேவாச ஆசிரியர் மூவர்க்கும் காலத்தாற் பிற்பட்டவரென்பதனைச் சான்றுகள் காட்டித் தெளிவாக விளக்கியுள்ளார்கள். இவ்விருதிற முடிபு களையும் காய்தலுவத்தலகற்றி ஆராய்ந்து திருவாதவூரடிகள் வாழ்ந்த காலம் இதுவென்பதனைத் திட்டமாக அறிந்து கொள்ளுதல் திருமுறை வரலாற்று ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்வதாகும்.

திருவாதவூரடிகள் தேவார ஆசிரியர் மூவர்க்கும் காலத் தால் முற்பட்டவரென்பதற்கு ஆசிரியர் மறைமலையடிகள் முதலியோர் கூறும் சிறப்புடைக் காரணங்களை முறையே ஆராய்வோம்.

(1) மாணிக்கவாசகர் இந்நிலவுலகத்திற் பிறந்தருளு தற்கு முன் சிவபெருமானுக்கு அனுக்கராய் அவர் பாலிருந் தனர். பின்னர் அவரது கட்டளையால் மக்கட் பிறவிக்கு வரலாயினுக்....மேலுலகத்திற் சிவபெருமான்மாட்டு அணுக் கராய் நிற்கும் தூய தொண்டர்கள் சிவகணங்கள் என்று வழங்கப்படுவர். அச் சிவகணங்களுள் தலைவராய் நிற்குஞ் சிலர்க்கு நந்திகள் என்னும் பெயருண்டு. அந் நந்திகளுள் ஒருவரே மாணிக்கவாசகராக இந்நிலவுலகிற் பிறந்தருளி னர். அவ்வுண்மை கண்டே மாணிக்கவாசகர்க்குப் பின் வந்த திருநாவுக்கரசு நாயகுர் குராமலரோடு அராமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழநந்தீசனை வாசகளுக் கொண் டார் என்று அருளிச் செய்தனர் " என்பது.

திருவாதவூரடிகள் வரலாறு கூறும் பெரும்பற்றப் புலி யூர் நம்பி திருவிளையாடல், திருவுத்தரகோசமங்கைப் புரா னம், கடம்பவன புராணம் முதலிய நூல்கள் கணநாதர்

بیمتری سمتم:۲۰ ع

  • மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் (மூன்ரும் பகுதி)

{{} பக்கம் 2-2.