பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/970

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

954

பன்னிரு திருமுறை வரலாறு


நூம்மைக் கண்டேன். அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்தருளல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதுகேட்ட உத்தராபதியார், சிறுத்

தொண்டரை நோக்கி, தவச்செல்வரே ! உம்மைக் காணும் விருப்புடன் இங்கு வந்தோம். யாம் உத்தசாபதி யோம். எம்மைப் பரிவுடன் உண்பிக்க தும்மால்

முடியாது ; செய்கை அரியது ; ஒண்ணுது என்று கூறினர். தேவரீர் அமுது செய்யும் இயல்பினை அருளிச் செய்யும். விரைந்து உணவு அமைக்கச் செய்வேன். சிவனடியார் கிடைக்கப் பெற்ருல் தேட ஒண்ணுதனவும் எளிதிலுளவாகும். அருமையில்லே " ៩: சிறுத் தொண்டர். அதனைக்கேட்ட பயிரவக்கோலப் பெருமான், எம் அன்புக்குரிய தொண்டரே ! யாம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை பசுவைக் கொன்று உண்பது ; அதற்கு உரிய நாளும் இந்நாளே யாகும் உம்மால் எம்மை உண்பிக்க முடியாது என்ருர். அதுகேட்ட சிறுத்தொண்டர், மிகவும் நன்று. மூவகைப் பசு நிரையும் உடையேன். பெரியீர்! நுமக்கு அமுதாகும் பசு இதுவெனத் தெரிவித்தால் யான் போய் அமுது விரைந்தமைத்துக் காலந் தப்பாமே வருவேன் ' என்று கைதொழுதனர். அவரை நோக்கி பைரவர், நாம் உண்ணப் படுக்கும் பசு நாபசு உண்பது அஞ்சுபிராயத்துள் ; உறுப்பில் மறுவில்லாதிருக்குமாளுல். புண்ணில் வேலெறிந்தாற் போன்று மேலும் சொல்ல வேண்டியது ஒன்றுண்டு என்ருர் கேட்ட சிறுத்தொண்டர் 'யாதும் அரியதில்லை. அருளிச் செய்யும்' என்ருர். இறைவரும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத் தாதை அரியத் தாய்பிடிக்கும்பொழுது தம்மில் மனமுவந்து குற்றமின்றி அமைத்த கறியினை யாம் இட்டு உண்பது ' என மொழிந்தார். அம்மொழியினைக்கேட்ட சிறுத்தொண்டர் எம்பெருமான் அமுது செய்யப் பெறில் அதுவும் அரிதன்று’ என்று, அடியவர் இசையப் பெற்றகளிப்பால் அவர் திருவடிகளை வணங்கி விரைந்து மனையினை

யடைந்தார்.

மனைவாயிலில் கணவர் வருகையை எதிர்நோக்கி நின்ற திருவெண்காட்டு நங்கையார், அவரது மலர்த்த முகங்கண்டு வந்த அடியாரைப் பற்றி வினவினர். ஒரு மகனுய ஐந்து வயதுடையய்ை அவயவப் பழுதில்லாத