பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/971

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 955

வயுைள்ள பிள்ளே யைத் தாய் பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப் பெற்ருல் அடியார் திருவமுது செய்தற்கு இசைந்தருளிஞர் ' என்ருர் சிறுத்தொண்டர். அதுகேட்ட கற்பிற் சிறந்த மனைவியார், பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுதமைப்போம் ' எனத் தமது இசைவினை முன்னர்ப் புலப்படுத்தி, ஒருவனுகி ஒருகுடிக்கு வரும் அச்சிறுவனைப் பெறுவது எவ்வாறு ? என்று வணங் கினர். சிறுத்தொண்டர் மனைவியார்தம் முகம் நோக்கி, இத்தன்மையுடைய பிள்ளையை நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரோ ? நேர் நின்று தம் பிள்ளையைத் தாமே அரியும் தாய் தந்தையர் இருக்க மாட்டார்கள். ஆகவே யான் உய்ய நீ பெற்றமைந்தனை இங்கு அழைப்போம் என்ருர். மனைவியார் கணவரை நோக்கி நம்மைக் காக்கவரும் மைந்தனைப் பள்ளியிற் சென்று அழைத்து வாரும் என்ருர், சிறுத்தொண்டர் மன மகிழ்ந்து தம் மைந்தர் ஓத அணைந்த பள்ளிக்குச் சென்ருர், பாதச்சதங்கை மணி யொலிப்பச் சீராள தேவராகிய பிள்ளை ஓடிவந்து தந்தையைத் தழுவிய நிலையில், சிறுத்தொண்டர் மைந்தனை யெடுத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தார். மைந்தனை எதிர் சென்று வாங்கிய வெண்காட்டு நங்கையார் பிள்ளையைக் குஞ்சி திருத்தி முகந்துடைத்துத் திருமஞ்சனமாட்டிக் கோலஞ் செய்து கணவர் கையிற் கொடுத்தார்.

பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர், அடியார்க்குக் கறியமுதாம் என்று மைந்தனை உச்சி மோவாது மார்பிலனைத்து முத்தங்கொள்ளாது அடியார்க்கு அமுதமைக்க அடுக்களையிற் செல்லாது வேறிடத்திற் செல்வாராயினர். ஒன்றிய உள்ளத்தாராகிய சிறுத் தொண்டரும் அவர்தம் மனைவியாரும் தாம் செய்யப்போகும் செயலின் உண்மையினை உலகத்தார் உள்ளவாறு அறியும் உணர்வுடையாரல்லர் என்று கருதி, மறைவிடத்திற் சென்று புக்கனர். பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங் களைக் கழுவிக்கொணர்ந்தார். உலகை வென்ற தந்தையார் பிள்ளையின் தலையைப் பிடித்தார். மெய்த்தாயார் பிள்ளையின் கிண்கிணிக் கால் இரண்டினையும் மடியின் புடையில் இடுக்கிக்கொண்டார். அதனைக்கண்ட மைந்தன் பெற்ருேர்