பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/972

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

956

பன்னிரு திருமுறை வரலாறு


முகம் நோக்கி மகிழ்ந்து நகைத்தனன். தனிமா மகனைத் தந்தையார் கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை யெய்தி அரிய வினைசெய்தார்கள். வெண்காட்டு தங்கையார், அறுத்த ാഷ്ട് இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்து அதன் மறைத்து நீக்கச் சந்தனத்தா தியார் கையில் கொடுத்துவிட்டு மற்றை உறுப்புக்களின் இறைச்சிகளெல்லாவற்றையும் அறுத்துப் பாகம் பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவர்க்குத்தெரிவித்தார்.

சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பயிரவரை வணங்கி, தேவரீர் அடியேன்பால் நண்ணி அமுது செய்தருள வேண்டும் என்னும் ஆர்வத்தால் தேவரீர் பசித்தருளக் காலத் தாழ்த்தேளுயினும், தேவரீர் சொல்லிய வண்ணம் திருவமுது சமைத்தேன். எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் ' என வேண்டி, வறியோன் இரு நிதியும் பெற்று வந்தாற்போல அடியவரைத் தம் மனைக்கு அழைத்து வந்தார். வெண்காட்டு நங்கையார் கொணர்ந்த தூய நீரால் அடியார் பாதங்களை விளக்கிய சிறுத் தொண்டர் அந்நீரை உள்ளும் புறம்பும் தெளித்தார். துரப தீபங் காட்டி வணங்கினர். மனைவியாருடன் அடியவரை யிறைஞ்சி நின்று திருவமுது படைக்கும் வகை எவ்வாறு' என வினவ இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒக்கப்படைக்க என்ருர் பயிரவர். அவர் கூறிய வண்ணம் திருவெண் காட்டு நங்கையார் பரிகலத் திருத்திப் பாவாடையில் ஏற்றிச் செந்நெற் சோறும் கறியமுதும் படைத்தார். அதனைக்கண்ட பயிரவர் அவரை நோக்கி, சொன்ன முறையிற் கொன்ற பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்திரோ?' என்ருர், தலை யிறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்” என்ருர் வெண்காட்டு நங்கையார். அதுவும்கூட நாம் உண்பது என்ருர் பயிரவர். அதுகேட்டுச் சிறுத் தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். அப்பொழுது சந்தனத் தாதியார், அந்தத் தலையிறைச்சி வந்ததொண்டர் அமுது செய்யும்பொழுது நினைக்க வரும் என்று முந்தவே கறியாக்கி வைத்துள்ளேன்’ என்று