பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/973

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 957

சொல்லி எடுத்துக் கொடுத்தார். திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து அதனை வாங்கிப் பரிகலத்திற் படைத்தார். அதன்பின் பயிரவர் சிறுத்தொண்டரைப் பார்த்து இங்கு நமக்குத் தனியே உண்ண ஒண்ணுது. இறைவனடியார் இப்பக்கத்தே யுள்ளாரை அழைத்து வாரும் என்ருர், கேட்ட சிறுத்தொண்டர் அடியார் அமுது செய்ய இடையூறு இதுவோ என்று வருந்தி, வீட்டின் புறத்தே சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணுது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன். யானும் திருநீறு இடு வாரைக் கண்டு இடுவேன் என்ருர். அதுகேட்ட பயிரவர் உம்மைப்போல நீறிட்டார் உளரோ ? நீர் உடன் உண்பீர் என்று கூறித் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, வேருெரு பரிகலம் இடச்செய்து வெம்மை யிறைச்சிச் சோறு இதனில் மீட்டுப் படையும் ' என்ருர், அவரும் அவ்வாறே படைத்தார். உடனமர்ந்த சிறுத் தொண்டர், அடியாரை உண்பிக்க வேண்டித் தாம் உண்ணப் புகுந்தார். அதுகண்ட பயிரவர் அவரைத் தடுத்தருளி, 'ஐயா, யாம் ஆறுமாதம் கழித்து உண்போம், நாம் உண்ணுமளவும் பொறுத்திராது சோறுநாளும் உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன் ? நம்முடன் இருந்துண்ண மகவினைப்பெற்றீராயின் அம் மைந்தனை அழையும்’ என் ருர், அதனேக்கேட்ட சிறுத்தொண்டர் இப்பொழுது அவன் உதவான் என்ருர். நாம் இங்கு உண்பது அவன் வந்தால்தான். நாடி அழையும் என்ருர் பயிரவர். அச்சொற்கேட்டுத் தரியாது சிறுத் தொண்டர் மனைவியாரொடும் புறத்தேபோய் அழைக்கும் போது சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார். அவர் மனைவியாரும் தலைவர் பணியில் தலைநிற்பவராய் அழைப்பவர், * செய்ய மணியே ! சீராளா ! வாராய். சிவஞர் அடியார் யாம் உய்யும் வகையால் உடனுண்ன அழைக்கின்ருர் ' என்று ஒல மிட்டழைத்தார். அப்பொழுது பரமர் அருளால் பள்ளிக் கூடத்தினின்று ஓடி வருவானைப் போன்று வந்த புதல் வனைத் தாயார் தழுவியெடுத்துச் சிவனடியார் அமுது செய்யப் பெற்ருேம் என்னும் மகிழ்ச்சியால் கனவளுர் கையிற்கொடுத்தார்.