பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/975

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 95%

கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானதனை

வல்வினையே என்றது.நான் மற்று ' (திருக்களிற்றுப்-18) எனத்திருகடவூர் உய்ய வந்த தேவநாயனரால் விளக்கப் பெற்றுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். சிவ பூசைக்கு இடர்விளைத்த தந்தையின் கால்களை வெட்டிய சண்டீசர் செயலும், இறைவனுக்குத் திருவமுதாதற் பொருட்டுத் தாம் கொணர்ந்த படிக்கட்டளைப் பொருள்கள் வயல் வெடிப்பிற் சிந்தினமையால் தமது ஊட்டியை அறுத்த அரிவாட்டயர் செயலும் மேற்குறித்த வல்வினை யைச் சார்ந்தன என்பது திருக்களிற்றுப்படியார் 19 20ஆம் வெண்பாக்களால் அறியப்படும்.

சேரமான் பெருமாள் காயனர்

பதினுெராந் திருமுறையாசிரியர்களுள் ஒருவரும் நம்பியாரூரர்க்குத் தோழராய் அவருடன் திருக்கயிலை சார்ந்தவரும் ஆகிய இவரது வரலாறு (இந்நூல் 555, 567ஆம் பக்கங்களில்) முன்னர் விளக்கப்பெற்றது.

கணகாத நாயனர்

ஆளுடையபிள்ளையார் அவதரித்தருளிய காழிப்பதி யிலே அந்தணர் மரபில் தோன்றியவர் கண நாதர். அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்புடன் நல்ல திருப் பணிகள் செய்பவர் , தம்மை விரும்பி வந்தடைந்தவர்களை நல்ல தந்தவனப் பணி செய்தல், நறுமலர் கொய்தல், மாலை தொடுத்தல், திருமஞ்சனமெடுத்தல், திருவல கிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கிடுதல், திருமுறை எழுதுதல், வாசித்தல் முதலிய திருத்தொண்டுகளிற் பழக்கிச் சிவனடியார்களாக்கி அவர்களுக்கு வேண்டும் வசதிகளைச் செய்து கொடுப்பவர் ; இங்ங்னம் மனையறத்தி லிருந்து கொண்டு சிவனடியார்களை வழிபடுந் தொழிலின ராகிய கணநாதர், திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவடி களை நாள் தோறும் முப்போதும் விதிப்படி பூசை செய்து போற்றுபவர். ஆளுடைய பிள்ளையாரை வழிபட்டு அலகில் தொண்டருக்கு அறிவளித்தவராகிய கணநாதர், இறைவர் திருவருளால் கயிலைமால்வரையெய்திச் சிவ கனங்களுக்கு நாதராம் நிலைபெற்ருர்,