பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/978

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

962

பன்னிரு திருமுறை வரலாறு


பொழுது குடபுல மன்னவர் கொணர்ந்த திறைப்பொருள் களைக் கண்டு திறைகொணர்ந்த அரசர்க்குச் செயலுரிமைத் தொழில் அருளி, அமைச்சர்களை நோக்கி, ' நம்முடைய ஆணைக்கு அடங்காத அரசர்கள் வாழும் அரணங்கள் உள வாயின் தெரிந்து கூறுங்கள் என்று சொல்லி அங்கே சில நாட்கள் தங்கியிருந்தார். அப்பொழுது ஒரு நான் சிவ காமியாண்டார் கொண்டு வந்த பூக்களைச் சிதறிய தம் முடைய யானையையும் பாகர்களையும் கொன்ற எறிபத்த நாயனுரையணைந்து ' என்னையும் கொன் றருளும் ' என்று தம்முடைய வாளைக் கொடுத்துச் சிவத்திருத்தொண்டிலே சிறந்து விளங்கினர்.

அமைச்சர்கள் திறைகொணராத பகையரசனுெருவ னுளன் என்று புகழ்ச்சோழரையிறைஞ்சி அறிவித்தார்கள். அதுகேட்ட புகழ்ச்சோழர் ஆங்கு அவன் யார் ? என வினவினர். ' அதிகன் அவன் அணித்தாக ஒங்கெயில் சூழ் மலையரணத்துடன் உறைவான் என்றனர் அமைச்சர். வேந்தர் அமைச்சர்களை நோக்கி, ஈங்கு உங்களுக்குத் தடையாக நிற்கும் அரணும் உளதோ ? படையுடன் சென்று அவ்வரணத்தைத் துகளாக்கி அழிப்பீராக எனப் பணித்தார். அமைச்சர்கள் கடல் போன்ற பெருஞ்சேனை யுடன் புறப்பட்டுச் சென்று அதிகனது மலையானைப் பொடி யாக்கி அவனுடைய சேனைகளை வளைத்துக்கொண்டார்கள். அதிகன் அஞ்சி ஒடிப்போய்ச் சுரத்தில் ஒளிந்து கொண்டான். சோழரது படை வீரர்களிற் பலர் அதிக னுடைய படை வீரர்களின் தலைகளையும் மற்ற வீரர்கள் நிதிக்குவியல்களையும் யானை குதிரை முதலிய சேனைகளை

யும் கொண்டு கருவூர்க்கு வந்து சேர்ந்தார்கள்.

புகழ்ச் சோழர், தமக்கு முன்னே படைவீரர் கொணர்ந்த பகைவர் தலைகளின் நடுவே சடை முடித்தலை ஒன்றிருத்தலைக் கண்டார். கண்டபொழுதே நடுங்கிமனங் கலங்கிக் கண்ணிர் சொரிந்து இவ்வுலகில் திருநீற்றின் நெறி புரந்து யான் அரசு புரிந்த முறை மிகவும் நன்று என வருந்தினர். சீர்தாங்கும் இவர் வேணிச் சிரந்தாங்கி வரக்கண்டும், பார்தாங்க இருந்தேனே பழிதாங்குவேன் என்று இரங்கினர். ஒன்று செய்யத் துணிந்து அமைச்சரை நோக்கி, மன்றில் நடம்புரிவார்தம் வழித்தொண்டின் வழி நாட்டினைக் காத்து அரசளிக்கும்படி என் மைத்தனுக்கு