பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/980

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

964 பன்னிரு திருமுறை வரலாது

அதிபத்த காயர்ை

பொன்னி நாட்டில் நாகப்பட்டினத்தில் பரதவர் குலத்தில் தோன்றியவர் அதிபத்தர். பரதவர் தலைவராய்ச் சிவபத்தியிற் சிறந்த இவர், நாள் தோறும் கடலில் மீன் பிடிக்குங்கால் வலையில் அகப்படும் மீன்களில் முதல் மீனை இது சிவனுக்கு என்று அன்பினுல் விட்டுவந்தார். இவ் வாறு ஒழுகும் நாளில் பல நாட்களில் ஒவ்வொரு மீனே வலையிலகப்பட அதனைக் கடலிலே விட்டுவந்தார். வலை வளம் குறைந்து வறுமையெய்தித் தம் சுற்றத்த ர்கள் உணவின்றி வருந்தவும் தாம் வருந்தாது நாளும் ஒவ்வொன்ருகக் கிடைத்த மீனே இறைவனுக்கென்றே விட்டு மகிழ்ந்தார்.

இப்படி நிகழும் நாளில் வேறு ஒருநாள் இலருடைய ஏவலராகிய பரதவர்கள் கடலில் வலைவீசியபொழுது உலகெலாம் விலையெனக் கொன் ளத்தக்க நவமணிகளால் உறுப்பமைந்த பொன்மீனென்று அகப்பட்டது. பரத வர்கள் அதனை எடுத்து ஒரு மீன் படுத்தே ம் என்றனர். அதிபத்த நாயஞர், ஞாயிறு போன்று ஒளி வீசும் மீனைக் கண்டு இது என்னை ஆட்கொண்டருளிய சிவனுக்கே யுரியதாகும், ஆதலால் அவர் திருவடியைச் சேர்க என்று கடலிலே விட்டார். அப்பொழுது சிவபெருமான் விடை மீது விசும்பில் தோன்றியருளி, அஞ்சலிகூப்பி நின்று பணிந்த அதிபத்த நாயனரைச் சிவலோகத்திலே அடியார் களுடன் அமர்ந்திருக்க அருள் புரிந்து மறைந்தருளினுர்,

கலிக்கம்ப காயஞர்

தில்லையின் மேல்பாலுள்ள திருப்பெண் ணு கடத்திலே வணிகர் குலத்தில் தோன்றியவர் கலிக்கம்ப ந பணுச். இவர் அவ்வூரிலுள்ள திருத்துங்கான மாடத்து அமர்ந்த பெருமானுக்குத் திருத்தொண்டு செய்பவர்; சிவனடியார் களுக்குத் திருவமுதளித்து வேண்டும் பொருள்களைக் கொடுக்கும் இயல்புடையவர் ஒருநாள் தமது வீட்டிலே திருவமுது செய்யவந்த சிவனடியார் எல்லாரையும் முறைப்படி திருவமுது செய்யத் தொடங்குவித்தற்கு முன்பு தமது மனைவியார் கரக நீர்வார்க்க அவர்களுடைய