பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/984

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

968

பன்னிரு திருமுறை வரலாறு


கின்றசீர் நெடுமாற நாயஞர்

பாண்டிநாட்டிலே மதுரையம்பதியிலே அரசுபுரிந்த கூன்.பாண்டியன் சமணர்களது சூழ்ச்சியிலகப்பட்டுச் சமன சமயத்தை மேற்கொண்டு அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருவருளால் சைவசமயத்தை மேற்கொண்டு கூன் நிமிர்ந்து நெடுமாற நாயனுர் எனப் பெயர்பெற்ற செய்தி திருஞானசம்பந்தப் பிள்ளையார் வரலாற்றில் விரித்துரைக்கப்பெற்றது. ஆளுடையபிள்ளையார் அருளால் தென்னுடு சிவம்பெருகச் செங்கோல் செலுத்திய நெடுமாறனர், வட நாட்டிலிருந்து போர் வேண்டி வந்தெதிர்த்த வட புலவேந்தரைச் சோழ நாட்டிலுள்ள நெல்வேலிப் போர்க்களத்திலே எதிரேற்றுப் பெரும்போர் செய்து பகைப்புலத்தார் வலியிழந்து தோற்ருேட வெற்றி மாலை புனைந்தார். நெடுமாறர் நெல்வேலிப் போரில் வெற்றிபெற்ற திறத்தினை,

! நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலிவென்ற

நின்ற சீர்நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

என நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையிற் குறித்துப் போற்றியுள்ளார். வளவர்பிரான் திருமகளாராகிய மங்கையர்க் கரசியாரை மணந்து சிவபெருமானுக்கேற்ற திருத்தொண்டுகள் புரிந்து அருள்பெருக நெடுங்காலம் அரசளித்த நின்றசீர் நெடுமாற நாயனர் இறைவரருளால் சிவலோகத்தினையெய்தி இன்புற்ருர்,

வாயிலார் நாயனர்

தொண்டை நாட்டிலே மயிலாப்பூரிலே வேளாளர் குலத்திலே வாயிலார்குடியிலே தோன்றியவர் வாயிலார் நாயனர். சிவனடித்தொண்டில் விருப்புடையராகிய இப் பெரியார், மறவாமையால் அமைத்த மன க்கோயிலினுள்னே இறைவனை இருத்தி ஆண்டான் அடிமை உறவினையுணர வல்ல ஞானமாகிய திருவிளக்கினை ஏற்றி, அழியாத ஆனந்தமாகிய திருமஞ்சனம் ஆட்டி, அன் பாகிய திருவமுதினை அமைத்து வழிபாடு செய்தலாகிய அகப் பூசையினை நெடுநாட்கள் வழுவாது செய்திருந்து சிவ பெருமான் திருவடி நிழற்கீழ்ச் சென்றடைந்தார்.