பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/985

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 369

முனையடுவார் காயனர்

இவர், சோழநாட்டில் திருநீடூரில் வேளாண் குலத்தில் தோன்றியவர் ; சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர் பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாருதளிக்கும் வாய்மையுடையார் ; போரில் மாற்ருர்க்குத் தோற்றவர்கள் தம்மிடம்வந்து துணைவேண்டினுல் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையாற் கூலிபேசிக்கொண்டு அவர்களுக்காகப் போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார் களுக்குச் சொன்ன சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார். அதனுல் இவருக்கு முனையடுவார் என்னுந் திருப்பெயர் உண்டாயிற்று. இவரது இயற்பெயர் இதுவெனத்தெரியவில்லை. முனையடுவார் நாயனுர் நெடுங் காலம் ஈசன டியார்க்கான திருப்பணி புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்ருர்.

கழற்சிங்க நாயனர்

"கடல்சூழ்ந்த உலகெலாங்காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என நம்பியாரூரராற் போற்றப்பெற்ற இந்நாயனுர், பல்லவர் குலத்திலே தோன்றியவர் ; சிவனடியன்றி வேருென்றை அறிவினிற் குறியாதவர் ; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாளும் வேந்தராகிய இவர் ஒருநாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலே வணங்கச் சென் ருர், அப்பொழுது திருக்கோயிலை வலம் வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்குக் கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள்கையிற் புதுமலரைக்கண்டு அங்கு வந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் . இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் ' என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த அவள் மூக்கினை க் கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே வீழ்ந்து அரற்றினுள். உள்ளே பூங்கோயிலிறைவரைப் பணிந்து வெளியே வந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலையறிந்து