பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 83

திருமுன்னர் அப்பெருமானைப் போற்றிப் பரவி அவரது திருக்குறிப்பறிந்து ஏவல் செய்யும் தூதுவராய் நிற்கும் பதவிநிலையைக் குறித்த பெயராகும். இதனை ஒருவர்க் குரியதாய் வழங்கும் இயற்பெயரென்ருே சிறப்புப் பெய ரென்ருே கொள்ளுதல் சிறிதும் பொருந்தாது. இறைவனை நன்மொழிகளாற் புகழ்ந்து போற்றும் மெய்யடியார் யாவராயி னும் அவர்கள் வாசகர் என்ற சொல்லால் வழங்குதற்குரியவ ரென்பது திருநாவுக்கரசர் பாடியருளிய,

" குசையும் அங்கையிற் கோசமுங்கொண்ட அவ்

வசையில் மங்கல வாசகர் வாழ்த்தவே இசைய மங்கையும் தானுமொன் ருயினுன் விசைய மங்கையுள் வேதியன் காண் மினே ”*

எனவரும் திருவிசயமங்கைத் தேவாரத்தால் நன்கு உய்த் துணரப்படுகின்றது. மறைகளை நன்குணர்ந்து கையில் தருப்பையும் புத்தகமும் தாங்கியவர்களாகிய மறைமுனி வர்கள் குற்றமற்ற நன்மொழிகளைச் சொல்லி வாழ்த்தத் திருவிசயமங்கை யென்னும் திருப்பதியுள் இறைவன் உமை யம்மையாருடன் ஒருங்கு வீற்றிருக்கும் அழகிய காட்சியை விளக்குவது இத்திருக் குறுந்தொகைப் பாடலாகும். இதன் கண் அவ் வசையில் மங்கலவாசகர் ' எனப் பன்மை கூறிய வதனுல் இறைவனை நன்மொழிகளாற் புகழ்ந்து போற்று வோர் அனைவரையும் வாசகர் என்னும் இச்சொல் உணர்த்தி நின்றமை நன்கு தெளியப்படும். எனவே திருநாவுக்கரசர் திருப்பாடலில் வழங்கிய வாசகன் என்ற சொல் மாணிக்க வாசகப் பெருமானேக் குறிப்பதன் றென்பது நன்கு பெறப்படு தல் காண்க. திருவாதவூரடிகளுக்கு வழங்கும் மாணிக்கவாசகர் என்னும் பெயர் வழக்கம் கி பி. 15-ம் நூற்ருண்டுக்குப் பிற்பட்டதாதலின் அதனை முற்காலத்தவரான திருநாவுக் கரசர் வாசகன் என்று முதற் குறையாக வழங்கினரென்பார் கூற்று சிறிதும் பொருந்தாதென்க.

(2) நரியைக் குதிரை செய்வானும் ” எனத் திருவா ரூர்த் திருப்பதிகத்திலும் " மணியார் வைகைத் திருக்கோட் டில் நின்றதோர் திறமுந் தோன்றும் " எனத் திருப்பூவணத் திருத்தாண்டகத்திலும் திருநாவுக்கரசர் குறிப்பிட்ட

  • திருநாவுக்கரசர் திருவிசையமங்கைத் திருக்குறுந்தொகை هنته سiriنة فيسة