பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/998

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

982

பன்னிரு திருமுறை வரலாறு


ளுவல் மரத்தினுடனே கூடத் தம்பெருமான் வீற்றிருந் தருளும் நிலையில் அதனைப் பெருந் 9@ఉఉతarథ அமைத் தார். அமைச்சர்களை ஏவிச் சோழ நாட்டின் உள்நாடுகள் தோறும் சிவபெருமான் அமர்ந்தருளும் அழகிய திருக் கோயில்கள் பலவற்றை அமைத்து அக்கோயில்களில் நிகழும் பூசனைக்கு வேண்டிய அமுதுபடி முதலான படித்தரங்களுக்குப் பெரும்பொருள் வகுத்துச் செங்கோல் முறையே நாட்டினை ஆட்சிபுரிந்தார். பின்னர் இறைவன் திருநடம் இயற்றும் தில்லைப்பதியை அடைந்து பொன்னம் பலத்தே ஆடல்புரியும் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றி அங்குத் தில்லைவாழந்தணர்களுக்குத் திரு மாளிகைகள் கட்டுவித்துப் பின்னும் பல திருப்பணிகளைச் செய்துகொண்டிருந்து தில்லையம்பலவாணர் திருவடிநீழலை அடைந்தார்.

திருவானைக்காவில் தன் வாயின் நூலால் திருநிழற் பந்தர் செய்து வழிபட்ட சிலந்தியைச் சிவபெருமான் சோழர் குலத்திற் கோச்செங்களுனுகப் பிறப்பித்தருளிய இச்செய்தியை,

" சிலந்தி செங்கட் சோழளுகச் செய்தான் ” {2-63-7)

எனத் திருஞானசம்பந்தரும்,

" சிலந்தியும் ஆனைக்காவிற்”றிருநிழற்பந்தச் செய்து

உலந்தவ ணிறந்த போதே கோச்செங்களுனுமாகக் கலந்தநீர்க் காவிரிசூழ் சோளுட்டுச் சோழர் தங்கன் குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கை வீசட்டமூரே "

(4-49-4}

எனத் திருநாவுக்கரசரும்,

" தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலத்தி

சித்திரப் பந்தர் சிக்கென வியற்றச் சுருண்ட செஞ்சடையாய் அது தன்னச்

சோழனுக்கிய தொடர்ச்சிகண் டடைந்தேன் (7-86-2) "திருவும் வண்மையுந் திண்டிற லரசும்

சிலந்தியார் செய்த செய்பணி கண்டு மருவுகோச் செங்களுன் றனக்களித்த

வார்த்தைகேட்டு துன் மலரடியடைந்தேன்." (7-65–13 எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் போற்றியுள்ளமை காணலாம். திருவம்பர்ப் பெருந்திருக்கோயில், வைகல்