பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O4 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


-T_ ------------ -i.

பிறகு, வலது காலை தரையிலிருந்துநகர்த்தாமல் மார்பை மட்டும் உயர்த்தி, கழுத்தையும் முதுகையும் சற்றுப்பின்புறமாக வளைக்க வேண்டும். நேரே பார்க்கவும். (இப்பொழுது மூச்சை உள் இழுக்க வேண்டும்). 4. இப்பொழுது, வலது காலையும் இடது கால் போல் பின்னோக்கி நீட்டி இடக்காலுடன் சேர்த்து வைத்து நிற்கவும். o ■ - o - o ion--- o - ***** - _ இப்படி ற்பதானது. உடல் எடை முழுவதும் கைகளில் விழுந்திருக்க, தலை முதல் கால் வரை ஒரே நேர்க் கோட்டில் நேராக இருப்பது போல கால்களை நீட்டியிருக்கவும். (இன்னும் மூச்சை உள்ளுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும்.) 5. அந்த நிலையிலிருந்து முழங்கால்களையும் முழங்கைகளையும் தாழ்த்தி நிற்கவும். இப்பொழுது இரு கால்களும் இரு முழங்கால்களும் இரு உள்ளங்கைகளும், மார்புப் பகுதியும், நெற்றியும் தரையைத் தொட்டுக் கொண்டிருப்பதை உணரமுடியும். அதே சமயத்தில், பிட்டத்தை சற்று உயர்த்திய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். (இப்பொழுது மூச்சை வெளியே விடவேண்டும்.)