பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 1 O5 6. இப்பொழுது மூச்சை இழுத்துக் கொண்டு, முழங்கைகளை உயர்த்தி, மார்பை உயர்த்தி முன்னோக்கித் தள்ளி, முதுகையும் கழுத்தையும் பின்னோக்கித் தள்ளி, கைகளில் மட்டுமே விழுந்திருந்த உடலின் எடையை கைகள் முழங்கால்கள், கால் விரல்களில் படுமாறு நிமிர்ந்திருக்க வேண்டும். 7. கைகளையும் கால்களையும் அசைக்காமல் அப்படியே பதித்து வைத்து, பிட்டத்தை (Buttock) முடிந்தவரை மேலே உயர்த்தி நிற்கவும். பிட்டம் மேலே உயரும்போது, குதிகால்கள் தரையில் நிற்க வேண்டும். மோவாய் மேல் மார்புப் பகுதியைத் தொடவேண்டும். முழங்கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு தலையை உடலிருக்கும் உட்புறமாக அழுத்தித் தள்ளவும். (மூச்சை உள்ளுக்கே வைத்துக் கொண்டிருக்க வேண்டும்). 8. பிறகு, இடது காலை மட்டும் முன்புறமாகக் கொண்டு வந்து, இருகைகளுக்கு இடையிலே தரையின்மீது வைக்கவும். இந்த நிலையானது அசைவு மூன்றைப் போன்றதுதான் ஆனால் அதில் இடதுகால் நீண்டிருக்க, வலது கால் முன்னே இருந்தது. இதில், இடது கால் முன்னே இருக்க, வலது கால் நீண்டிருக்கிறது. (மூச்சை இன்னும் உள்ளேயே இருக்க வேண்டும்). 9. இப்பொழுது வலது காலையும் கொண்டு வந்து, இடது காலோடு சேர்த்து வைத்து, அசைவு 2ல் உள்ளது போல நிற்க வேண்டும். மூச்சினை மூக்கின் வழியே விடவேண்டும்.