பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 9 உடல் காக்கும் உபாடு நல்ல வாழ்வு நிறைந்த உடல் நலமும், நிலையான இன்பமும், நீண்ட ஆயுளும் தனக்கு வேண்டும் என்று விரும்பாத நெஞ்சம், இந்த உலகிலேயே இல்லை என்றால், அது உண்மைதான். ஆறறிவு பெற்று, பேரழகு உறுப்புக்களையும் பெற்று, சீருருவமாகத் திகழ்கின்ற மனித குலத்தின் மாறாத நோக்கமும் இதுவேதான். வாழ்கின்ற காலம் வரை வளமாக வாழ வேண்டும் என்ற வேட்கையும் விருப்பமும் தளராத முயற்சியும் ஒவ்வொருவருக்கும் உண்டு. நோக்கத்தில் நினைவு ஒன்றுதான் என்றாலும், செயல் ஆக்க முறைகளில்தான் பலர் வேறுபடுகின்றனர், மாறுபடுகின்றனர். இயற்கையாகவே உடல் வளர்கிறது. தேவையான வற்றை அதுவே நாடி சேர்த்துக் கொள்கிறது. தேடியும் சேகரித்து வைத்துக் கொள்கிறது. எதற்காக நாம் உடலை அலட்டிக்கொள்ள வேண்டும் என்று பேசி உல்லாச வாழ்க்கையில் உழன்று, அதன் பயனாக தீராத பிணிகளையும், மாறாத துயர்களையும் அடைந்து, நலிந்து, மெலிந்து, உள்ளம் உலைந்து அலைபவர்கள் பலரை நாம் பார்க்கிறோம். நோய் வந்தபின், வாய் புலம்பி, வழி கலங்கி, நொடி நேரமும் நிம்மதியின்றி, நொந்து வாழ்கின்ற மக்களையும், நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.