பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 13 \\ = = = = = = = = = = = = = = = = = عي 12. யோகம் (Yoga) என்பதன் i விளக்கம் ۶ - - - - - س----------- به யோகத்தின் பொருள் யோகாசனங்கள், மனித இனத்தை மகிமையுடன் வாழச் செய்ய வழிகூறும் அருமையான செய்தியாகும். இவை உடலை உறுதியாக்க வழிகாட்டும் வழிகாட்டிகளாகும். இவை மூளையை மேன்மைப்படுத்தும் முன்னோடி ஆற்றல்களாகும். இவை சமுதாயத்தை சரித்திரப் புகழ் படைக்க முன்னேற்றும் சாதுர்ய சக்திகளாகும். + யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள வேர்ச் சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு ஒருங்கிணைத்தல் அல்லது எல்லாவற்றையும் எந்த விதமான வேறுபாடுமின்றி, முழுமைப்படுத்துதல் என்பது பொருள். யோகம் என்றால், கலையும் மனதை அலையாமல் ஒரு நேர் வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் நாம் கூறலாம. யோகம் என்பது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனித்திறன் என்று கிருஷண பகவான், அர்ச்சுனனுக்குக் கூறுவதாக பகவத்கீதையில் நாம் காண்கிறோம். எனவே, யோகம் என்பது - வாழ்க்கை வழியாக, நமது வாழ்க்கைக்கு வேண்டிய எல் வித அம்சங்களையும் விடாது