பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 21 தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சிறந்தவற்றில் வேட்கை போன்ற சீரிய குணங்களைப் பெறமுடியும். நல்ல உடலை வளர்த்து, நல்ல உடலில் நல்ல குணங்களையும் வளர்த்து, அந்த குணங்களை வழி நடத்திச் செல்லும் மாபெரும் சக்தியினையும் வளர்த்துவிடும் பெரும் பொறுப்புடன் தான், யோகமுறை உடற்பயிற்சிகள் இருக்கின்றன. யோகப் பயிற்சியின் யூகப் பணி 1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும், இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குதல். 2. உள்ளுறுப்புக்களையும் வெளியுறுப்புக்களையும் தூய்மைப்படுத்தி, அதனதன் பணிகளை அருமையாகவும், திறமையாகவும், அயராமல் செயல்படுத்தத் தூண்டுதல். 3. சாதாரணமாக செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப்படுத்துவதுடன் உடல் நலமும் மன வளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துதல். 4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகுவிரைவாக வெளிப்படுத்தவும், உடலை கசடற்ற முறையில் வைத்துக்காக்கின்ற சக்தியினை உடலுக்கும் தருதல். அதாவது, நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புக்கள் மற்றும் சிறுநீரகம் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளித்தல்.