பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 23 5. யோகமுறைப் பயிற்சியின் வகைகள் ராஜயோகம், ஹடயோகம், கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், மந்திரயோகம் என்று பிரிந்து நின்று செயல் பட்டாலும், யோகமுறைகளின் முடிவான நோக்கமெல்லாம் ஒன்றுதான், என்றாலும் அடையும் குறிக்கோளை அணுகிச் செல்கின்ற வழியில் தான் சற்று வித்தியாசப்படுகின்றன. ஏனெனில், மனிதர்களின் குணங்கள் ஆளுக்கு ஆள் மாறித்தானே அமைந்திருக்கின்றன. அவர் அவருக்கு ஏற்ற வழிகளில், இயைந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்து, பயன்பெற வேண்டும் என்பதும், ஒன்றை ஒன்று ஒட்டித் தழுவியே அவைகள் ஒருங்கிணைந்து போகின்றன என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உடலை ஓரிடத்தில் அமர்த்தி வைக்கின்ற இருக்கைகள் மூலம் (Assanas) உடலைவிட மனதுக்கு மட்டுமே சிறந்த பயிற்சியை அளிப்பது ராஜயோகம் என்பதாகும். உடல் இருக்கைகளையே பெரிதும் வற்புறுத்தி, அதனை மேலும் மேலும் செய்யவைத்து, உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்து, உடலைப் பண்படுத்தி அதன் மூலம் மனதைப் பண்படுத்துவது ஹடயோகம். எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல், கடமையே பிரதானம் என்றும், மனிதகுலச் சேவையே மாபெரும் சேவை