பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 29 வாழ்பவர்கள் என்கிற ஆண் பெண் வேறுபாடின்றி அனை வருக்கும் ஏற்றதென்பது வல்லுநர்களின் அபிப்பிராயமாகும். ஒரு சில கடுமையான பயிற்சிகளைத் தவிர, மற்ற ஆசனங்களை அனைவரும் செய்யலாம். யோகாசனங்கள் மொத்தம் 108 என்றும், அவற்றுள் மிக முக்கியமானவை 72 என்றும் கூறுவர். 72 முக்கிய யோகாசனங்களை ஏற்படுத்தியதற்கும் ஒரு காரணம் உண்டு என்றும் சிலர் கூறுகின்றார்கள். நல்ல உடல் வலிமை உள்ள ஒருவருக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை நாடித்துடிப்பு உண்டு என்பது நமக்குத் தெரியும். அந்த ஒவ்வொரு துடிப்புக்கும் ஒவ்வொரு ஆசனம் என்று செய்து வந்தால், உடலுக்கு எந்தவிதமான வியாதியும் வராது என்பது ஐதிகம். ஆசனங்கள் அனைத்தையும் இல்லறத்தார் செய்வதற்கென்றும், துறவறத்தார் செய்வதற்கென்றும் உள்ள அமைப்புடன் பிரித்து வைத்திருக்கிறார்கள். இல்லறத்தார் செய்கின்ற ஆசனங்களை துறவறத்தார் செய்யலாம். ஆனால் கடுமையான இயமம் நியமம் உள்ள துறவிகளுக்குள்ள ஆசனங்களை, இல்லறத்தார் ஒருநாளும் செய்யக்கூடாது. செய்வது உடலுக்கு மட்டுமல்ல, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து வந்தாலும் வரலாம் ஆகவே, உணர்ந்து பொறுப்புடன், பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யோகத்திற்குத் துணையாக உள்ள இந்த யோகாசனங்களை இரண்டு வகையாகப் பிரித்திருக் கின்றார்கள்.