பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 31 7. ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள் 1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும். 2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப்பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது. 3. எப்பொழுதும் நன்றாகப் பசியெடுக்கிறது. 4. உடலுக்கு வருகின்ற நோய்கள் ஆரம்பநிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன. 5. மிகவும் முக்கிய உறுப்புக்களான இதயம் நுரையீரல்கள், மற்றும் மூளைப் பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது. 6. தடையில்லா குருதியோட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலை பூரண பொலிவு பெற வைக்கிறது. 7. உடல் அவயவங்கள் எல்லாம் விரைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழியமைகிறது. 8. தோல், நரம்பு, சினையுறுப்பு, மற்றும் முதலுறுப்பு என்கிற அனைத்துப் பகுதிகளுக்கும் ஆசனப் பயிற்சிகள் உரமூட்டுகின்றன.