பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 33 s 8. பிராணாயாமத்தின் ೧೮ಣಣ) பிராணாயாமம் என்ற சொல்லை, பிராணன் + யாமம் என்று பிரித்துக் கூறலாம். ம் ாைன் என்றால், காற்று என்றும், யாமம் என்றால் கட்டுதல் என்றும் கூறலாம். அதாவது வெளியில் திரியும் காற்றை உள்ளுக்கிழுத்து அடக்கி, அதன் சாரத்தைக் கட்டிக் கொள்ளுதல் என்பதாகும். தமிழில் பிராணாயாமம் என்றதை, சமஸ்கிருதத்தில் பிராணா அய்மம் என்று அழைத்தனர். பிராணன் என்றால் காற்று, அய்மன் என்றால் நீளம் என்று பொருள். காற்றை நீளமாக இழுத்தல் என்று அர்த்தம். நீளமாக என்றால் அதிக நேரம் ஆழ்ந்து, ஆழமாக இழுத்தல் என்பதாகும். பிராணத்தைக் கட்டுதல் என்ற பொருள் நமக்குப் புரிவதுபோல் இருந்தாலும், அந்தப் பிராணன் என்பது என்னவென்று அறிந்துகொள்ள வேண்டுமானால், அதனை நாம் பிறந்த நேரத்திலிருந்தே தொடங்கிப் பார்ப்போமே! தாய் வயிற்றிலிருந்து, தலை கீழாகப் பிறந்து வரும் ஒரு குழந்தை, திடீரென்று கூக்குரலிடுவதுபோல் அழத் தொடங்குகிறது. இந்தப் பாழும் உலகில் வந்து பிறந்து விட்டோமே என்ற வருத்தத்தில் அந்தக் குழந்தை அழுவதாகக் கவிஞர்கள் கற்பனை நயத்துடன் பாடி மகிழ்வார்கள் உண்மை அதுவலல. தாய் சுவாசிக்கத் தான் பெற்று மகிழ்ந்து வயிற்றில் வாழ்ங்க சிசு, தாய் வயிற்றை விட்டு வெளியே வந்து தானாகச்