பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 35 உயிர்க் காற்றுதான் (பிராணவாயு) உடலியக்கத்திற்குப் பெரிதும் உதவுகின்றது. இதனை மூக்கின் வழியாகத்தான் சுவாசிக்க வேண்டும். மூக்கின் உள்ளே இருக்கும் மயிர்க் கற்றைகள், புகுந்து வரும் புழுதியினைத்தடுத்து, மீறியும் நுழைகின்ற கிருமிகளை உள்ளே உள்ள என்சைம் (Enxyem) களால் கொன்று, வெயிலாயிருந்தால் குளிராகவும், குளிர் காலத்தில் பதமாகவும் மாற்றி காற்றினை நுரையீரலுக்கு அனுப்புவதால்தான் மூக்கின் வழியே சுவாசிக்க வேண்டும் என்று பெரியவர்கள் வற்புறுத்துகின்றார்கள். உள்ளே சென்ற உயிர்க் காற்றினை நுரையீரலிலிருந்து, பெறுவதற்காக, இரத்த சிவப்பணுக்கள் இருக்கின்றன, அவைகள் ஒரு துளி இரத்தத்தில் 250 மிலியன்களுக்கு மேல் இருக்கின்றன. அவைகளின் ஆயுள்காலம் 120 நாட்களுக் குள்ளேதான், அவைகள் தங்கள் கடமையை மிகவும் பொறுப்புடன் சுறுசுறுப்புடன் ஆற்றி மடிந்து போய் விடுகின்றன. இழந்த சிவப்பணுக்களுக்காக, ஒவ்வொரு வினாடிக்கும், 12 மில்லியன் புது இரத்தச் சிவப்பணுக்களை உடல் பிறப்பித்துத் தரவேண்டியிருக்கிறது. ஆகவே, அந்த அணுக்களின் ஆக்கபூர்வமான அதிசய இயக்கத்திற்குத் தேவையான உயிர்க்காற்றை, நாம்தானே காற்றாக இழுத்துத் தரவேண்டும். அது எவ்வளவு அவசியம் என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டாமா? நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதற்கும் எடுத்துச் சென்று, அவைகள் வெளியேற்றும் கழிவுப் பொருட்களை விரைவாகக் கொண்டுவந்து, நுரையீர