பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா லோடு சேர்ந்து செயல்படுத்தும் இரத்த ஓட்டத்திற்கு ஆதாரம் உயிர்க்காற்றுதான். அதனால்தான், மூச்சிழுக்கும் பணி முக்கியமான பணி என்கிறோம். அவ்வாறு மூச்சிழுப்பதை ஆழ்ந்து இழுத்து (Deep) ச் செய்யவேண்டும். ஒரு நிமிடத்தில் நாம் எத்தனை முறை மூச்சிழுக்கிறோம் தெரியுமா?15லிருந்து 20 முறை. நாம்தான் அப்படியென்றால் ஒரு சில மிருகங்கள் எத்தனை முறை சுவாசிக்கின்றன என்றும் தெரிந்து கொள்வோமே! எலி ஒரு நிமிடத்திற்கு 50 முறை சுவாசிக்கிறது. அதிக வேகம்தான். கோழிக்குஞ்சும் குரங்கும் ஒரு நிமிடத்திற்கு 30 தடவை சுவாசிக்கின்றன. பூனையோ 24 தடவை, குள்ளவாத்தும், குதிரையும் 20 முறை. அடங்கி அடங்கி ஊர்கின்ற ஆமையின் மூச்சு வேகம் நிமிடத்திற்கு மூன்று முறைதான் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றனர். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21600க்கு மேலாக சுவாசிக்கிறான் என்றும் கணக்கிட்டிருக்கின்றார்கள் விஞ்ஞானிகள். இவ்வாறு ஆழ்ந்து மூச்சிழுப்பதால் என்ன பயன் என்று கேட்கலாம். நாம் உள்ளே செலுத்துகின்ற காற்றின் சக்தியினை இரத்தம் பெற்று, அதனால் வேகமாக இயங்கி, உடல் முழுவதும் பரவுகிறது. அவ்வாறு பரவும் இரத்தத்தை நமது இதயமோ ஒரு மணிக்கு 800 குவார்ட்ஸ் இரத்தத்தின் அளவாக உடலெங்கும் இறைத்துப் பணியாற்றுகிறது. நாம் சுவாசிக்கின்ற காற்றிலிருந்து பெறும் சக்தியைப் போலவே, உண்ணும் உணவிலும், குடிக்கும் திரவத்திலும் TTTTTT TTT TTTT TTTTT TTTTS TTTT TT TTTTS