பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா யோகப் பயிற்சியை செய்பவர்கள், பிராண சக்தியை நிறைய சேகரித்து வைத்துக்கொண்டு, சக்தி மிகுந்தவர்களாக விளங்குகிறார்கள்! எப்படி? பிராணாயாமத்தின் மூலம்தான். பிராணாயாமம் என்பது பிராண சக்தியை கட்டுப்படுத்துவது என்பது, சுவாசத்தைக் கட்டுப்படுத்திப் பெறுவது என்பதே அடிப்படை நுணுக்கமாகும். சாதாரணமாக, பயிற்சி செய்யாத ஒருவன் சுவாசிக்கிறான் என்றால், அவன் ஒழுங்கற்ற முறையிலேதான் சுவாசிக்கிறான். நெல்லுக்கு இறைக்கின்ற நீர் புல்லுக்கும் வயல் பொந்துகளுக்கும் போய் வீணாவது போலவே அவனது சுவாசம் உள்ளது. ஆசனப் பயிற்சிகள் செய்பவன் ஒழுங்கான முறையில் சுவாசித்து அந்த உன்னத பிராணசக்தியை பெருமளவு பெற்றுக்கொள்கிறான். இவ்வாறு சுவாசிக்கின்ற முறையினை, கொஞ்சங் கொஞ்சமாக ஆசனம் செய்பவர்கள் விருத்தி செய்து கொண்டிருக்கின்றனர். அதனையும் இங்கே காண்போம். பிராணாயாமத்தில் எத்தனையோ கடினமுறை சுவாசப் பயிற்சிகள் உண்டு. அவற்றை நீக்கிவிட்டு, நாம் சுகமாக செய்யகூடிய பிராணாயாம முறையைக் காண்போம், அதற்கு சுகபூர்வக பிராணாயாமம் என்று பெயர். இதற்குப் பொருள், சுகமாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதுதான். இதனை எண்ணிக்கை முறையில் 1, 2, 3, 4, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டே மூச்சினை இழுப்பதுதான்.