பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 41 நுரையீரல் எப்பொழுதுமே காற்றின்றி காலியாக இருப்பதில்லை. ஆழ்ந்த கண்ணறைகளான காற்றுப் பைகளில் காற்று இருந்துகொண்டே தான் இருக்கும். உள்ளே இருக்கும் காற்றானது, நாலா பக்கமும் பரவி வெளியேற்றப்படவேண்டுமானால், புதிதாக உள்ளே போகின்ற காற்றின் அழுத்தம் அதிகமாக இருந்தால்தான் (քiդպմ, உதாரணமாக, குட்டையில் தண்ணிர் தேங்கி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தண்ணிரை அடித்துக்கொண்டு போக வருகின்ற புதிய வெள்ளத்தில் வேகம் இருந்தால்தான், விரைந்து வெளியேற்ற முடியும். இல்லையேல் வந்த புது வெள்ளமும் குட்டைக்குள்ளே படுத்துக் கொண்டுவிடும். அதுபோலவே, மூலை முடுக்குகளில் தேங்கி இருக்கும் பழைய காற்றைத் தள்ளி பயன்படச் செய்ய வேண்டுமானால், புதிய காற்றை வேகமாக உள்ளே இழுத்து நாம் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் நாம் ஆழ்ந்த சுவாசம் (Deep Breathing) வேண்டும் என்கிறோம். மெதுவாக இழுக்கப்பட்டடு உள்ளே போகும் காற்றுக்கு வலிமை இல்லாது போவதால், ஏற்கனவே இருக்கும் காற்றைத் தள்ள இயலாமல் போய்விடுகிறது. அதனால் ஏற்படும் நட்டம் என்னவென்றால், உள்ளே இருக்கும் அந்தக் காற்றிலே கரியமில வாயு கலக்கப்பட்டுவிட ஏதுவாகின்றது என்பது தான. கரியமில வாயு கலந்து விட்டால், சோர்வும் களைப்பும், தானாகவே உண்டாகிவிடுமே. ஆகவேதான், ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும் என்கிறோம். அப்படி இழுப்பதால்,