பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 43 0S C C C C C C C C C C C C C C C CCCCCCC CCCCCCCCS o 9. ஆசனம் செய்யும் முறைகள் : S C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C S (அ) அனைவரும் செய்யலாம்: ஆண் பெண் பாகுபாடின்றி, வயது வேறுபாடின்றி, இளையோர் முதல் முதியோர் வரை எல்லோரும் ஆசனப் பயிற்சி செய்யலாம். ஆனால் அந்தந்த இனத்திற்கும், வயதிற்கும் தன்மைக்கும், உடல் அமைப்புக்கும் ஏற்றபடி, திறமைக்கும் உகந்தவாறு உடல் நலத்திற்கு ஏற்ற முறையில், ஆசனங்களைத் தேர்ந்தெடுத்து செய்தால், எதிர்பார்த்த பலனை இனிதே அடையலாம். (ஆ) பயிற்சி நேரம்: விடியற் காலையில் ஆசனம் செய்வது சாலச் சிறந்ததாகும். அதற்குரிய நேரத்தை காலை 6 மணி முதல் 7 மணி வரை என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். ஆதவனின் வெப்பம் அதிகம் பரவாத குளிர்ந்த நேரமல்லவா அது! மாலை நேரமாக இருந்தால் அதேபோல வெயிலின் வெம்மை குறையும் தருணத்தில் 6 மணி முதல் 7 மணி வரை என்றும் கூறுவார்கள். ஆகவே நேரத்தை அறிந்து அதன்படி பயில வேண்டும். (இ) உடை உடலைக் கவ்விப் பிடித்திருக்கின்ற இறுக்கமான ஆடை, பயிற்சிக்கு உகந்ததல்ல, குறைந்த அளவு உடையே போதும். ஜட்டி அல்லது லங்கோடு கட்டிக் கொண்டும் ஒரு சிலர் பயிற்சி செய்வர். இன்னும் சிலர், அரைக் கால் சட்டை, பனியன் போட்டுக் கொள்வர். பெண்களாயிருந்தால், உடல் தடையில்லாமல் இயங்குவதற் கேற்ற ஆடை இருந்தால் நல்லது.