பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 45 ஆசனம் முடிந்த உடனேயே, முகம் கழுவிக் கொள்வதோ அல்லது குளிப்பதோ கூடாது. சளிப்பிடித்தல், காய்ச்சல் போன்ற உடல் வேதனைகளை அது உண்டாக்கக்கூடும் என்பதால், தவிர்க்க வேண்டும். 3 முடிந்தவரை, உடலை தளர்ந்த நிலையில் (Relax) வைத்துக்கொண்டுதான் ஆசனங்களை செய்யவேண்டும். 4. ஆசனப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பும், ஆசனப் பயிற்சிகளை செய்து முடித்த பின்பும் மிகக் கடின முள்ள வேறு பல உடற் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லதல்ல. அது மாறுபட்ட பயனையே கொடுக்கும். 5. எல்லா ஆசனப் பயிற்சிகளின் போதும், இயல்பாக நாம் இழுத்து விடும் வழக்கமான சுவாசம் போல்தான் இருக்கவேண்டும். 6. ஒவ்வொரு ஆசன முடிவிலும் வெறிதே மல்லாந்து படுத்திருக்கும் ஒய்வாசனம் (சவாசனம்) செய்வது மிகமிக அவசியம். (உ) பயிற்சி நேரத்தில்: ஆசனத்தில் ஒவ்வொரு இயக்கமும் மெதுவாக ஆனால் உறுதியாக, ஒழுங்கான முறையில் இருப்பதுபோல் செய்யவேண்டும். அவயவங்களை விறைப்பாக, முழுதுமாக நீட்டிச்செய்ய வேண்டிய நிலையினை எல்லாம் முறையாகப் பின்பற்றிச் செய்யவேண்டும். எந்த இயக்கத்தையும் வலிந்து, கட்டாயப்படுத்தி, மல்லுக் கட்டிக்கொண்டு, வெறித்தனமாகச் செ.யக் கடாது. செய்கின்ற இயக்க முறையில் ஒருவித அழகு நளினம், இலயம் எப்பொழுதும் நிறைந்திருக்க வேண்டும். நீண்டநேரம் ஒரு ஆசனப் பயிற்சியில் அமர்ந்திருந்தால், நிறைய பலன் உடனே கிடைக்கம் என்பது, மிகவும் தவறான