பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நினைவாகும். குழந்தைக்கு அதிகமான உணவை ஊட்டினால், சீக்கிரம் வளர்ந்துவிடும் என்று முயலும் பெற்றோர், மாறான முடிவுக்குத்தான் ஆளாவார்கள். ஆகவே, அவ்வாறு செய்யாமல் ஒரு குறித்த நேரத்திற்குள் பயிற்சியை செய்து முடித்து விடவேண்டும். ஆசனம் பழகும்போது, ஆரம்பத்தில் உடலின் ஒரு சில பகுதிகளில் வேதனையிருக்கும், வலியிருக்கும், மூட்டுக்கு மூட்டு விண்னென்று தெறிக்கும். அதற்காக மனந்தளர்ந்து பின் வாங்கி விடக்கூடாது. ஆசனமானது உடனேயும் வந்துவிடக் கூடியதல்ல. நாளுக்குநாள், வேளைக்கு வேளையென்று, உடல் உறுப்புக்கள் இயல்பாக வளைந்துவரும் தன்மையுடையன வாகத்தான் உருமாறும். கொஞ்சம் கொஞ்சமாக வளைவதற்கு ஏற்ற நிலைக்குக் கொண்டு வந்து விடலாம், தொடர்ந்த பயிற்சியும் விடாமுயற்சியும்தான் நமக்குத் தேவை. உறுப்புக்கள் வலிக்கின்றன என்றால், பயிற்சிகள் பலிக்கின்றன என்பதுதான் பொருள். ஆகவே, வலியை பொருட்படுத்தாது கவனமாக இயன்ற அளவு முறையாக செய்து வந்தால், முய்சியில் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆசனங்களை நான்கு வகையாக நாம் பிரிக்கலாம். 1. இரு கால்களையும் நீட்டி, பிறகு கால்களை மடக்கி உட்கார்ந்த நிலையிலிருந்து செய்யும் ஆசனங்கள். 2. மல்லாந்து படுத்துக் கொண்டு செய்யும் ஆசனங்கள். 3. குப்புறப் படுத்துக் கொண்டு செய்யும் ஆசனங்கள். 4. நின்ற நிலையிலிருந்தே செய்யும் ஆசனங்கள்.