பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பயன் தரும் யோகாசனங்கள் என்று இந்த நூலுக்குத் தலைப்பினைத் தந்திருக்கிறேன். பயன் தரும் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர், பின்பற்ற வேண்டிய முறைகளையும் உரிய வழிகளையும் தெளிவாகத் தொகுத்துத் தந்திருக்கிறேன். முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். முறைமாறிச் செய்தால், நிலைமாறிப்போவது நிச்சயம் என்று அனுபவப் பட்டவர்கள் கூறுகின்றனர் உள்ளுறுப்புக்கள்தான் யோகாசனத்தில் முழுக்க முழுக்கப் பயன்படுகின்றன. பயன் பெறுகின்றன. உள்ளுறுப்புக்கள் தூய்மைபெற, வலிமையுற பயிற்சி செய்யும் நேரத்தில், மிகவும் நியமத்துடன், பயபக்தியுடன் நெறிபிறழாது செய்ய வேண்டும். அவசரமும் பதட்டமும் உள்ளுறுப்புக்களை தலைகீழாக்கித் திசைமாற்றி, நம்மைக் கவலைக்குள்ளாக்கி விடும். எச்சரிக்கை இது. கவனம் வேண்டும். உடற் கல்வி ஆசிரியர்களுக்கு உற்றுழி உதவும் குறிப்பு நூலாகவும், பள்ளி மாணவர்கள் பாங்குடன் புரிந்து கொண்டு, பக்குவமாக செய்து பழகவும், பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளோர் அனைவருக்கும் உதவும் வகையிலேதான் இந்நூல் எழுதப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் உரிய பெயர் விளக்கம், ஆசனம் செய்கின்ற முறை, செய்தபின் பெறும் பயன்கள்; அதனை எண்ணிக்கையில் செய்யும் முறை என்ற வகையில் 32 யோகாசனங்கள் படங்களுடன் தரப்பட்டிருக்கின்றன. எப்பொழுதும் தனியாக ஆசனம் செய்யாமல், தெரிந்தவர் துணையுடன் செய்வதுதான் சிறந்த முறையாகும். இந்நூலை எல்லோரும் வரவேற்று ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். லில்லி பவனம் - டாக்டர். எஸ். நவராதற் செல்லையா சென்னை - 17 സ. ഋ 원곡