பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 51 --- Doo on Lou Bo Los Lou Loo. Fo: "o -: o o سه سه - - - - - - - - م | l. உட்கார்ந்து கொண்டு செய்யும் ஆசனம் - 1. பத்மாசனம் பெயர் விளக்கம்: இதனை கமலாசனம் என்று கூறு பத்மம் என்றாலும் கமலம் என்றாலும், தாமல் வைத்தான் குறிக்கும். - மடக்கி வைத்திருக்கும் இரண்டு கால்களும் பூவிதழ் களைப்போல் அமைந்திருப்பதால்தான், இதற்கு இந்த பெயர் வந்துள்ளது. தியானத்திற்குப் பயன்படுகின்ற நான்கு ஆசனங்களில், பத்மாசனம்தான் முதலிடம் பெறுகிறது. தவம் புரியும் யோகிகளுக்கு மட்டுமல்ல, இல்லறத்தாருக்கும், ஆண்கள், பெண்கள், இளையோர் அனைவருக்கும் ஏற்றதொரு அருமையான ஆசனம் பத்மாசனமாகும். செயல்முறை: விரித்திருக்கும் சமுக்காளத்தின் மீது கால்களை விறைப்பாக நீட்டியிருப்பதுபோல், முதலில் அமரவும். - முதலில், வலது காலை மடித்து, இடது கால்புறமாகக் கொண்டு வந்து, வலது காலில் குதிகால் , இடது கால் தொடக்க இடமான (அதாவது இடுப்பெலும்பும் தொடை எலும்பும் சேருகின்ற பகுதியில், (Groin) பிட்டியில் சரியாக அமரும் வண்ணம் வைக்கவும். அதேபோல், இடது காலை முழங்கால் மடிய வளைத்து வலது கால்புறம் கொண்டுவந்து, இடது காலின் குதிகால், வலப்புற பிட்டிப் பகுதியில் படுவது போல் வைக்கவேண்டும். ... -- on