பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 53 4. கைகளை முழங்கால்கள் மீது வைத்து ஆசன இருக்கையில் இருத்தல். (படம் பார்க்க) 2. ஸ்வஸ்திகாசனம் பெயர் விளக்கம்: ஸ்வஸ்திகா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு செழிப்புடைமை (Prosperous) என்பது பொருளாகும். இந்த ஆசனப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால். வாழ்க்கையில் செழிப்பையும், வெற்றி யையும் கொண்டு வரும் என்பதால்தான், இதற்கு ஸ்வஸ் திகாசனம் என்று யோகிகள் அழைத்திருக் கிறார்கள். செயல் முறை: விரிப்பில் உட்கார்ந்து, கால்களை முன்புறமாக விறைப்பாக நீட்டி இருக்கவும். முதலில் வலது காலை * ". மடக்கி, இடது தொடைப்பக்கம் கொண்டு சென்று இடது பிட்டியில் (Groin) படும்படியும், அதேபோல இடது கால்ை + மடித்தும் வைக்கவேண்டும். . பிறகு இடது காலின் முன் பாதத்தை (Toe) வலது காலிக் உள்ள கெண்டைக் காலுக்கும் தொடைக்கும் (Calf and thigh muscles) மத்தியில் உள்ள இடைவெளியில் நுழைக்க வேண்டும். .” அதேபோல் வலது முன் பாதத்தையும் இடது கால் பகுதியில் வைத்தால், இரண்டு பாதங்களும் கெண்டைக்கால் தொடைத் தசைகளுக்கிடையில் இருப்பதை நன்கு உணர (υριqu-μο. | அ | ஆ ,