பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 55 - இரு குதிகால்களும் சந்திக்கின்ற இடத்தில், முதலில் வலது உள்ளங்கை விரித்திருக்குமாறு வைத்து, அடுத்து அந்த வலது கைமீது இடது புறங்கை அமர்ந்திருப்பதுபோல அமர வேண்டும். முதுகு, கழுத்து, தலை எல்லாம் ஒரே நேர்க் கோட்டில் இருப்பது போலவும், கால்கள் நீண்டு விரிந்திருப்பது போலவும் அமர வேண்டும். பயன்கள்: பத்மாசனத்திற்குரிய பயன்கள் அனைத்தும் கிடைக்கும். எண்ணிக்கை முறையும் பத்மாசனத்திற் குரியவைதான். 4. உட்ரா பத்மாசனம் பெயர் விளக்கம்: தரையில் உட்கார்ந்து செய்வது பத்மாசனப் பயிற்சியாகும். அந்த பத்மாசன இருக்கையிலே மேலும் தொடர்ந்து செய்கின்ற பயிற்சிகள் உட்ரா பத்மாசனமாகும். மேலே எழும்பு என்பது உட்ரா எனும் சொல்லுக்குப் பொருளாக அமைந்திருக்கிறது. - செயல்முறை: பத்மாசன இருக்கையில் முதலில் இருக்க வேண்டும். (பத்மாசனம் செய்ய வேண்டிய முறையை பத்மாசனப் பகுதியில் காண்க) பத்மாசனத்தில், கைகள் முழங்காலில் வைக்கப் பட்டிருக்கும். ஸ்வஸ்திகாசனம், சோமாசனத்தில், கைகள் குதிகாலுக்கு நேர்புறமாக வைக்கப்பட்டிருக்கும். உட்ராபத்மாசனத்தில், கைகளை, தொடைகளுக்குப் பக்கவாட்டில் தரையில் வைக்கவேண்டும். விரல்கள், முன்புறம் பார்ப்பதுபோல, (முழங்காலை நோக்கி) நேராக வைத்திருக்க வேண்டும். o